உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டம் துணை இயக்குனர். செல்வி செண்பக பிரியா.IFS. சான்றிதழ்கள் பரிசுகளை வழங்கினார்.!!
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியாவின் 17-ஆவது
புலிகள் காப்பகமாக
தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகமாக
களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது
மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியை ஆக்கிரமித்து, ஈரமான பசுமையான காடுகளைக் கொண்டுள்ளது;
14 ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதி.
இது அகஸ்தியர்மலை உயிர்க்கோள காப்பகத்தின்
ஒரு பகுதியாகும்,
இந்தியாவில் உள்ள தாவர பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர்வாதத்தின்
ஐந்து மையங்களில் ஒன்றாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் (IUCN) கருதப்படுகிறது.
பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு
புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள்,
உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. என்பது சிறப்பு அம்சமாக திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை உள்ளது
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது. புலிகள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு
ஆண்டும் ஜூலை
29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்,
நெல்லை அரசு அருங்காட்சியகம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் சார்பில்
புலிகளை காப்போம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில்
1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 20 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள்
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு தலையணை பகுதிக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறையினர் அழைத்து செல்ல உள்ளனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்போம் (திருநெல்வேலி)கள் இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் மாரிமுத்து அறிவுறுத்தலின் பேரில்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டம் துணை இயக்குனர். செல்வி செண்பக பிரியா. உத்தரவின் படி
முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காரையாறு அரசு பழங்குடியின உண்டி உறைவிட பள்ளியில் புலிகள் தின நிகழ்ச்சி முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி, வனவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனக்காப்பாளர் அசோக்குமார் வரவேற்றார்.
இதில் மாணவர்களுக்கு புலியின் குண நலன்கள், தன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. புலிகள் சம்பந்தமாக மாணவ, மாணவிகளுடன் வனத்துறையினர் கலந்துரையாடினர்.
தொடர்ந்து
தினம் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள்;
உண்மையில் சுழற்சி
ஓவியப் போட்டி
முக ஓவியம்
சொற்பொழிவு.
புலிகள் வரையும் போட்டிகள்
நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டம் துணை இயக்குனர். செல்வி செண்பக பிரியா.
சான்றிதழ்கள் பரிசுகளை வழங்கினார்
விழாவில் வனக்காப்பாளர் பேராட்சி செல்வி, ஆசிரியர்கள் பிரபாவதி மரியம்மாள், மாரியம்மாள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகச் செல்வி, சங்கர வடிவு, உதவியாளர் செல்லச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர் மேலும் கடையம் வனசரக சார்பில் புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நம் நாட்டின் நீர் & காடு வளங்கள் குறையாமல் இருக்க வேண்டுமெனில் அது புலிகளை பாதுகாத்தால் மட்டுமே…புலிகளைப் பாதுகாப்போம்..
🌳 கே தமிழகம் சேட் ✍️