வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கன்னி வைத்ததால்.. அதில் ஆண் புலி அகப்பட்டு இறந்தது இதன் தொடர்பாக 7 நபர்களை வனத்துறையினர் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்

வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கன்னி வைத்தும். அதில் ஆண் புலி அகப்பட்டு இறந்தது இதன் தொடர்பாக 7 நபர்களை வனத்துறையினர் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் ..!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்  பவானிசாகர் வன சரகம் கொத்தமங்கலம் பிரிவு, கொத்தமங்கலம் காவல் சுற்று, வனப்பகுதியில் சுருக்கு கன்னியில் சிக்கி  சுமார் ஐந்து  வயது உடைய ஆண்புலி ஒன்று இறந்ததுகிடந்தது வனத்துறையினர் கண்டறியப்பட்டு இறந்த புலியை கைப்பற்றி வன கால்நடை மருத்துவர்கள் இறந்த ஆண் புலியை 
 உடற்க் கூறு
 ஆய்வு செய்த பின்னர் புலி எரிக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின்( SOP ) அறிவுரைகளின் படி 
 
சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர். ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு.) மற்றும் ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில். 

பவானிசாகர் வன சரக அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் வனவர்கள் வனக்காப்பாளர்கள் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் என வனத்துறையினர் குழு அமைத்து எவ்வாறு ஆண் புலி இறந்தது என்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு சுஜ்ஜில் குட்டை பகுதியில் புலன் விசாரணை மேற்கொண்ட போது 

பூதி குப்பம் சதீஷ்குமார். சுஜ்ஜில் குட்டை பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து. பத்மகுமார். திவின்குமார். பூங்கார் காலனி லோகேஷ்.
பால் தினகரன். சௌந்தரராஜன். ஆகிய ஏழு பேரும் வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கன்னி வைத்தும். அதில் புலி அகப்பட்டு இறந்ததும் தெரியவந்தது எனவே வனசரக வன உயிரென குற்ற வழக்கு எண்.03/2023 தொடர்புடைய

  7.நபர்கள் மீது  வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து

சத்தியமங்கலம் கனம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்,
என வனத்துறையினர் தகவல்...!!
 

🌳 கே தமிழகம் சேட் ✍️