வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.42 கோடி செலவிலான 200 மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.4.63 கோடி செலவிலான 50 பொலிரோ ஈப்புகள், ரூ.5.25 கோடி செலவிலான 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும்வனத்துறை சார்பில் வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக
2 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவிலான 200 மின்சார இருசக்கர வாகனங்கள்,
4 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலான 50 பொலிரோ ஈப்புகள், வன உயிரினஅவசர மீட்பு பணிகள் மற்றும் காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளித்திட 5 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட
35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் (specially designed rescue andrehabilitation vehicles) ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு 920.52 கோடி ரூபாய் செலவில் சிறப்பு திட்டமான காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
உள்ளூர் மக்களின் ஈடுபாட்டுடன் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் வனவிலங்கு வாழ்விடங்களை மேம்படுத்துவதும் கார்பன் சம நிலையை அடைவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நடப்பு ஆண்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு 104.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளன.
வன சுற்றுச்சூழலை பாதுகாத்திட 2.42 கோடி ரூபாய் நிதியில் 200 மின்சார இருசக்கர வாகனங்களை வனத்துறை கொள்முதல் செய்துள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனங்கள் முன்களப் பணியாளர்கள் தொலைதூர பகுதிகளைப் பார்வையிடவும்,
ரோந்து செல்லவும் பெரிதும் உதவும்.
மேலும், வனத்துறையின் கள மேலாண்மை பணிக்காக 4.63 கோடி ரூபாய் நிதியில் 50 பொலிரோ ஈப்புகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், வனப் படையை நவீனமயமாக்குவதற்காக அரசு 52.83 கோடி ரூபாயினை ஒப்பளிப்பு செய்துள்ளது. வன உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், வன மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும். அதன் மனிதவளத்தின் திறனை வளர்ப்பதற்கும் மற்றும் உட்புற மற்றும் தொலைதூர வனப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இந்நிதியைப் பயன்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது,
இந்த திட்டத்தின் கீழ், 5.25 கோடி ரூபாய் நிதியில் 35 வாகனங்களை வனவிலங்கு பிரிவு கொள்முதல் செய்துள்ளது. இந்த வாகனங்கள் வனவிலங்கு பகுதிகளில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் 35 மாவட்டங்களில் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் முன்களப் பணியாளர்களை மனித வனவிலங்கு மோதல் பகுதிகள் மற்றும் காட்டுத்தீ பரவும் இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுத்தைகள் / புலிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளுக்கான பொறி கூண்டுகள், வலைகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களை கொண்டு செல்ல ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் விலங்கு மீட்புக்கு உதவும் வகையில் வாகனங்களில் தேடல் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் புவியிடங்காட்டி (GPS) மற்றும் ஒலிபெருக்கி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய விலங்குகளை மீட்க இந்த வாகனத்தில் 6 டன் வின்ச் பொருத்தப்பட்டுள்ளது. காயமுற்ற காட்டு விலங்குகளை மீட்க இந்த வாகனங்கள் பெரிதும் உதவும்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மா. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) திரு சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன் உயிரினக் காப்பாளர் திரு ஸ்ரீ சீனிவாச. ரெட்டி, இ.வ.ப., கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர் திரு.இ.அன்வர்தீன், இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேட்டினை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ.வி. மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரதமர்கள் கலந்து கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️