போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் மாணவ சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு பத்ரி நாராயணன் I.P.S. அவர்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு.
கோவை கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஏற்படுத்தும் தீமைகள் பற்றியும் காவல் நிலைய எல்கைக்குள் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தின் சார்பில் கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. பத்ரிநாராயணன், I.P..S . அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில்
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இது போன்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுச் சங்கத்தில் மாணவர்களது பங்களிப்பின் இன்றியமையாமை குறித்து விளக்கினார்.
எண்ணங்களின் எழுச்சியால் இமயத்தைத் தொட வேண்டிய இளைஞர்கள், போதை மயக்கத்தால் எதிர்காலத்தை தொலைக்கின்ற அவலத்தை எடுத்துரைத்தார்.
போதைப்பொருளின் மயக்கம், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் படுகுழியில் வீழ்த்துவதை இளைஞர்கள் உணர வேண்டும்.
குடும்பப் பொறுப்பும், சமுதாயப்பொறுப்பும் தமது அடப்படைக் கடமை என்பதை உணர் இன்ற இளைஞர்கள் உடலாலும், மனதாலும் வலுப்பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
தாமும் உயர்ந்து ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் உயர்த்துகின்றனர்;
ஆனால், போதைக்கு அடிமையாகின்ஞற இளைஞர்கள், தாம் மட்டுமன்றி தமது நட்பு வட்டத்தினரும் சீரழியக் காரணமாகின்றனர்.
அத்தகைய அவலத்தைத் தவிர்க்க வேண்டியே இளைஞர்கள் போதைபொருள் பயன்பாட்டிலிருந்து தம்மைத் தாமே பாதுகாத்தும்,
இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்தும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பள்ளிக்குழந்தைகள், பருவத்தினர், கல்லாரி மாணவர்கள் என்று அனைத்து இளம் வயதினர் மற்றும் பெரியோர்கள் இடத்திலும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை போதைப்பொருள் எதிர்ப்பு மாணவர் சங்கத்தினர் கொண்டு சேர்க்க வேண்டும்.
அத்துடன், போதைப்பொருள்களுக்கு அடிமையாகி மாணவர்கள் எதிர்காலத்தை தொலைக்கின்ற அவலங்களையும், அதிலிருந்து மீள்கின்ற மாணவர்களின் சாதனை வரலாறுகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
போதைப்பொருள் பயன்பாடு மட்டுமன்றி, அவை குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் குற்றங்களாக விளங்குவதை போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் மாணவ சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கற்பகம் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர். பேராசிரியர்கள்.
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாணவர் சங்கத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஊட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை நல்லுறவு கூட்டம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர் கே பிரபாகர் அவர்கள் தலைமையில் நடந்தது
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்டத்தில் உள்ள 65 ஆட்டோ ஆட்டோஸ்டாண்ட் டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை நல்லுறவு கூட்டம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே பிரபாகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் எதிர் வர இருக்கும் கோடைகால சீசனில் போக்குவரத்துக்கு இடஞ்சல் இல்லாமல் நடந்து கொள்ளவும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது மற்றும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்ளுதல் போன்ற அறிவுரைகளை
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்
கே. பிரபாகர் அவர்கள் வழங்கினார்..!
🌳 கே தமிழகம் சேட் ✍️