நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் பெட்டிஷன் மேளா குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து கணவன். மனைவி. மற்றும் அண்ணன் தம்பி பிரச்சனை தீர்த்து சேர்த்து வைத்தார் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது__!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில்
நீலகிரி மாவட்டத்தில் பெட்டிசன் மேளா காவலர் சிறார் மன்றத்தில் நடைபெற்றது
பொதுமக்கள் அளித்த மனுக்களில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசாரணை நடத்தப்பட்டது இந்தப் பெட்டிசன் மேளாவில் நிலவையில் இருந்த குடும்பப் பிரச்சனை பண பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக உள்ள மனுக்கள் மீது மறு விசாரணை செய்து தீர்வு காண நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.கே. பிரபாகர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்
இந்த பெட்டிசன் மேளாவில் கணவன் மனைவிக்கு ஒரு வருட பிரச்சனையை இருவரிடமும் உலக வாழ்க்கை முறைகளை பற்றி அறிவுரைகளை கூறி கடந்த பிரச்சினைகளை மறந்து கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தால் தங்களுடைய தலை முறை சிறப்பாக இருக்கும் எனக்கூறி கணவன். மனைவியும் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்
குடும்ப பிரச்சனையின் காரணமாக அண்ணன். தம்பி. இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர் அவர்களுக்கு. நாம். பிறப்பது ஒரு முறை. இறப்பது ஒரு முறை தான். வாழ்வது ஒரு முறை தான் நாம் இறந்தால் கொண்டு போவது எதுவும் இல்லை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரைகளை கூறி அண்ணன். தம்பி
சேர்த்து வைத்தார் அண்ணன். தம்பி வரும்போது தனித்தனியாக வந்தவர்கள் போகும்பொழுது கட்டிப்பிடித்து கண்ணீரோடு அண்ணன் தம்பி ஒரே காரில் சென்றதைப் பார்த்து அங்கு இருப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தனது அன்பால் பொதுமக்களை அரவணைத்து அறிவுரைகளை கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு முனைவர் கே பிரபாகரன் அவர்களை பெட்டிசன் மேளாவுக்கு வந்திருந்த பொதுமக்கள பாராட்டினார்கள்.
கோவை மாவட்டத்தில் பெட்டிசன் மேளா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பத்ரி நாராயணன் அவர்கள் துவக்கி வைத்தார். ...
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அவற்றிற்கான மறுவிசாரணை (Re-enquiry) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,
I.P.S.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
நடைபெற்ற பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 109மனுக்கள் மீது மறு விசாரணை மேற்கொண்டதில்,
2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்படும், 2 மனுக்கள் மீது மனு ரசீதுகள்(CSR) பதிவு செய்யப்படும்,105 மனுக்கள் சுமூகமான முறையிலும்தீர்வு காணப்பட்டது.
இந்த குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரி நாராயணன் அவர்கள் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை . நீலகிரி. மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பெட்டிஷன் மேளா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது .
🌳 கே.தமிழகம்சேட்✍️