கோவை துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர் அவர்கள் பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்...
தமிழக முதல்வர் மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்
தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்த பொன்விழா ஆண்டினை கொண்டாடும் வகையில்
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு
சுதாகர், அவர்கள் தலைமையில் மேற்கு மண்டலத்தின் பணி புரியும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சூடும் போட்டி நடைபெற்றது
இந்த நிகழ்வில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு விஜயகுமார், அவர்கள்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன். அவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரை உள்ள பெண் காவலர்களான துப்பாக்கி சுடும் போட்டி
மதுக்கரை மலையடிவாரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 170 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில்
துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு
கார்பன் பிரிவு
துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த திருமதி.நந்தினி முதலிடமும்,
கோவை மாநகர B2 காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வி.சௌமியா
2-ம் இடமும்,
கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த செல்வி.கனிமொழி , திருப்பூர் மாவட்ட ஆயுதப் பணியைச் சேர்ந்த திருமதி. மாணிக்கதாய் மற்றும் செல்வி.கௌசல்யா ஆகிய மூவரும் 3-ம் இடம் பிடித்தனர்.
பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி.கௌசல்யா முதலிடமும்,
கோவை மாநகர பெண் காவலர் செல்வி.சுகன்யா. 2-ம் இடமும், கோவை மாவட்டம் தலைமை பெண் காவலர் திருமதி.சரஸ்வதி 3-ம் இடமும் பிடித்தனர்.
இன்சஸ் பிரிவு
துப்பாக்கி சுடும் போட்டியில்
கோவை இருப்பு பாதை காவல் பிரிவில் பணிபுரியும் திருமதி.ரூபாவதி மற்றும் கோவை மாநகர குனியமுத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த திருமதி.ஞானப்பிரியா ஆகிய இருவரும் முதலிடமும், கோவை மாநகர காட்டூர் காவல் நிலையத்தை சேர்ந்த செல்வி.சண்முகப்பிரியா 2-ம் இடமும், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் காவலர் திருமதி.சாந்தி 3-ம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற ஆகியோர்களுக்கு
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர் அவர்கள் பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் போட்டியில் பங்குபெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் --!.
🌳 கே தமிழகம் சேட் ✍️