சத்தியமங்கலம் கம்பத்துராயன்கிரி வனப்பகுதியில் தீ ஏற்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் மாவட்ட வன அலுவலர்
வெங்கடேஷ் பிரபு ஆய்வு...!!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள
சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை. சிறுத்தை. புலி. கரடி. காட்டுமாடு. அரிய வகை பறவைகள். தாவரங்கள் உள்ளன
தற்போது கோடை காலத்தை ஒட்டி
கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து உள்ளன. செடி, கொடிகள் கருகி காணப்படுகின்றன. மேலும் நீர்நிலைகள் வறண்டு உள்ளனர்
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் கம்பத்துராயன்கிரி
மிக உயரமான செங்குத்தான மலை வனப்பகுதியில் வளர்ந்து உள்ள மூங்கில் மரம் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது
பின்னர் கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
தகவல் அறிந்த
சத்தியமங்கலம் புலிகள் காப்பக(ஈரோடு) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் அறிவுறுத்தல் பேரில்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக(ஈரோடு) வனப்பாதுகாவலர் மற்றும் துணை இயக்குனர் பொறுப்பு வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில்
சத்தியமங்கலம் வன சரக அலுவலர் பழனிச்சாமி.
டி. என். பாளையம் வனசரக அலுவலர் கணேஷ் பாண்டியன்.
கடம்பூர் வனசரக அலுவலர் இந்துமதி ஆகியோர்கள்
மேற்பார்வையில்
வனவர்கள். வனக்காப்பாளர்கள். வனக்காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 80 க்கும் மேற்பட்ட
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சென்றனர். இரவு பகல் பாராமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறன
இருப்பினும்
கம்பத்ராயன் மலையில் நேற்று மாைல காட்டுத்தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. ஏற்கனவே தீயை அணைப்பதற்காக சென்றிருந்த குழுவினர் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இரவு வரை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
இருப்பினும் காற்று அதிகமாக வீசுவதால் தீ அதிகப்படுத்தி வந்த நிலையில்
தொடர்ந்து
வனத்துறையினர் கம்பத்துராயன்கிரி வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீ பரவால்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️