17 ஆண்டுகளாக பாழடைந்த கிணறு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்
கே பிரபாகரன் அவர்களுக்கு காவல்துறையினர் பாராட்டு.!
நீலகிரி மாவட்ட காவல் அலுவலக வாளகத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் சுமார் 85 அடிகள் கொண்ட கிணறு ஒன்று அமைக்கப்பட்டது, அக்கிணறு பல ஆண்டுகளாக பழுதடைந்து,நீரானது உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது இந்த நிலையில் . அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கும் மற்றும் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களுக்கும் தண்ணீருக்காக சிரமப்பட்டு வந்த நிலையில்
தற்போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர் அவர்களின் முயற்சியால் மேற்படி கிணறு முழுவதும் சீரமைக்கப்பட்டு அதில் உள்ள தண்ணீரானது குடிநீராக பயன்படுத்தும் வகையில் புணரமைக்கப்பட்டது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் நெகிழ்ச்சியுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டணர்.
ஊட்டி அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் செல்ல 4 கி.மீ தூரம் நடந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் க்கு
S P. முனைவர் கே பிரபாகர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமரின் வருகைக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பிற பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதே தினம் மதியம் ஒரு மணியளவில் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஊட்டிக்கு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தொட்டபெட்டா காட்சி முனை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த கோத்தகிரி போக்குவரத்து சப் -இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொட்டபெட்டா முதல் சேரிங்கிராஸ் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தி அங்கிருந்து பிற போலீசார் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை பாராட்டியதுடன் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்
🌳 கே தமிழகம் சேட் ✍️