முதுமலை வந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றிய காவல்துறையினருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே பிரபாகரன் பாராட்டு..
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு முதல்முறையாக வந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யானைகளுக்கு உணவு அளித்தார்.
பின்னர்
ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் நரேந்திரமோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்க
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் அவர்கள்
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில்
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்
கே பிரபாகரன் மேற்பார்வையில்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்.துணை காவல் கண்காணிப்பாளர்கள். காவல் ஆய்வாளர்கள். இளம் ஆய்வாளர்கள். தலைமை காவலர்கள். காவலர்கள் இரவு பகல் பாராமல் சிறப்பான முறையில் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு
சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர்
கே பிரபாகரன் அவர்களுடன் இணைந்து திறம்பட பணியாற்றிய அனைவருக்கும் காவல்துறையின் சார்பில் அறுசுவை உணவு. பிரியாணி விருந்து வைத்து வழங்கினர்
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதுமலைக்கு வந்து சென்றது எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த விருந்து பாராட்டு.எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என காவல்துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதுபோல் தமிழ்நாடு வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் திருமதி.சுப்ரியாசாஹு அவர்கள்
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள்
மாவட்ட வன அலுவலர் மற்றும் வனசரக அலுவலர்கள் வனப்பணியாளர்கள் காவல்துறை மற்ற துறை அலுவலர்களுக்கு தங்களது பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கோவை
20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்து தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற காவலர்களுக்கு நற்சான்றிதழ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு பத்ரி நாராயணன் அவர்கள் வழங்கினார்
26.01.2023 குடியரசு தின அணிவகுப்பின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்டத்தை சேர்ந்த 38 காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
மேற்படி 38 காவலர்களுக்கு தமிழக அரசின் நற்பணி சான்றிதழ்
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவலர்களையும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவி்த்தார்.
🌳 கே தமிழகம் சேட் ✍️