ஒரு மாதம் ஆன பெண் யானை குட்டியின் உடலை கைப்பற்றி கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS முன்னிலையில் இறந்த குட்டி யானையின் உடற்கூறு ஆய்வு..!!
கோவை: பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை பகுதியில், தனியார் தோட்டத்தில் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.
இதையடுத்து தோட்டத்திலிருந்த பணியாளர்கள் பார்த்த போது, அதில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்தது
தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வனத்துறை அலுவலகத்தில் அமர்ந்திருந்த வனத்துறையினருக்கு
தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் இறந்த யானை குட்டியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 அடி ஆழம் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக அவ்வப்போது வந்த தண்ணீர் குடித்து செல்லும் போது,
அதில் சிறிய குட்டி தவறி விழுந்திருக்கலாம் எனவும், குட்டி விழுந்து சுமார் 3 நாட்களாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1மாதம் பெண் யானை குட்டியின் உடலை மீட்டனர்
இதனைத் தொடர்ந்து
ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில்
கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில்
கோவை மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமார்.
மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினர் விசாரித்து வருகின்றன இந்த உடற்கூறுஆய்வின்போது மாவட்ட உதவி வன பாதுகாப்பு செந்தில்குமார் வனசரக அலுவலர் செல்வராஜ். ஓசை செந்தில்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வனப் பணியாளர் உடன் இருந்தனர்..!!
பொள்ளாச்சி அருகே அட்ட கட்டி யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பதற்கான காரணங்கள் குறித்தும் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை இயக்குனர் மற்றும் வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்.
துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டம் துணை இயக்குனர் பார்கவ தேஜா. உத்தரவின்படி.
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி
அட்ட கட்டி.வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் உதவி வன பாதுகாவலர் செல்வம் தலைமையில்
கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில்
இதில், மின்கம்பிகள் மீது பாதுகாப்பு பூச்சுகள் பூசப்பட வேண்டும். முடிந்தவரை மின் ஒயர்களை பூமிக்கு அடியில் பதிப்பது, யானைகள் தும்பிக்கையை நீட்டினால் மின் கம்பிகள் படாதவாறு உயரத்தில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக மின்வேலிகள் அமைக்கும் போது அரசு அனுமதித்துள்ள அளவு மின்சாரம் மின் வேலிகளில் பாய்ச்சப்படுகிறதா என்பதை வனத் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் போதிய உயரத்தில் தொய்வு இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் அமைந்துள்ள இடங்களில் அமைக்கப்படும் மின்வேலி அமைக்கும் நிறுவனத்தின் தகவல் சேகரித்து வைக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும் அனைத்து எஸ்டேட் பகுதியிலும் நிர்வாகங்கள் ஆய்வு மேற்கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் மின்கம்பிகள், மின் கம்பங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களுக்கும், மலைவாழ் கிராம மக்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருவாய் துறையினர், போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்து யானைகள் வழித்தடத்தில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு மின்கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.
முன்னதாக
கூட்டத்தில் யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பதற்கான காரணங்கள் குறித்து படக்காட்சியுடன் விளக்கப்பட்டது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வனத்துறையினர் விளக்கினர்.
இந்த கூட்டத்தில் ஆனைமலை வால்பாறை பகுதி மின்வாரிய பொறியாளர்கள், வால்பாறை உட்கோட்ட போலீசார், பொள்ளாச்சி உட்கோட்ட. வனசரக அலுவலர்கள் புகழேந்தி
மணிகண்டன், வெங்கடேஷ், திருச்செல்வம், சுந்தரவடிவேல். வனத்துறை கால்நடை டாக்டர் விஜயராகவன், வால்பாறை, ஆனைமலை வருவாய் துறையினர் இந்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பயிற்சி மைய வனச்சரக அலுவலர் பாஸ்கரன் நன்றியுரை கூறினார்
🌳 கே தமிழகம் சேட் ✍️