ஊட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.60 லட்சத்தில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மேலும் ட்ரோன் கேமரா பயன்பாட்டுக்கு
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே பிரபாகர் அவர்கள்
பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்..!!
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக குளு குளு ஊட்டி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் மேலும்
கோடை சீசனுக்கு மட்டும் பல லட்சம் பேர்
சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார. கூடலூர். குன்னூர். கோத்தகிரி. சுற்று பகுதிகளில் உள்ள
கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க
ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால்
ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சீர் செய்தாலும். சாலை ஓரங்களில் வாகனங்கள் நிற்பதும் முன்னுக்கு பின்னும் விதிமுறைகள் மீறி வாகனங்களை செல்வதினால்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும்,
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
மேலும் ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இதேபோல் டிரோன் கேமராவும்
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர். அவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே பிரபாகர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன கேமராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும். மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாம். தற்போது பொருத்தப்படும் கேமராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் மாற்றப்பட்டு உள்ளது. ரூ.60 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்..!!
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பூக்கடை முன்பு பொதுமக்கள் சென்று வர போக்குவரத்து சீர் செய்து நடவடிக்கை எடுத்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.சசி மோகன் அவர்களுக்கு பாராட்டு..!
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் சைடில் உள்ள பூக்கடை மற்றும் வாகன ஸ்டாண்ட் உள்ளது இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறாகவும் மற்றும் பேருந்துகள் சரியான முறையில் சென்று வர முடியவில்லை எனவும்
இதை சீர் செய்ய வேண்டும் என
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*
சசி மோகன். அவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
இதனைத் தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் போக்குவரத்து ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் சென்று வர போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்களை தள்ளி நிறுத்தவும் மேலும் பூக்கடைக்கு வரும் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் லோடிங் செய்யவும் அறிவுறுத்தினார்கள்
இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சென்று வர சீர் செய்த கொடுத்த
ஈரோடுமாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.சசி மோகன் அவர்களையும் மற்றும் காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்..!!
🌳 கே தமிழகம் சேட் ✍️