மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் இருவாச்சி பறவை குஞ்சுகளை பாதுகாத்திட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பறவை. மற்றும் வன உயிரின இயற்கை ஆர்வாளர்கள் கோரிக்கை...!!
மேட்டுப்பாளையம்
இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை.
இருவாச்சி பறவை அளவில் சுற்று பெரியதானவை பறக்கும் போது ஹெலிகாப்டர் பறப்பததைப் போல இருக்கும் அதேபோல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையவை அலகுக்கு மேலே கொண்டை போன்ற அமைப்பு இருக்கும் இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது
இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.
பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் .உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.
இந்த நிலையில்
மேட்டுப்பாளையம் வன சரகத்தில் உள்ள கல்லார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது ஆங்கிலேயர்கள் அடர்ந்த காட்டில் 1900 ஆம் ஆண்டு கல்லார் பழப் பண்ணை தொடங்கப்பட்டது
இங்கு ஆண்டு முழுவதும் சீரான சீதோசஷ்ன நிலை நிலவும். இங்கு மறைந்த பாரத பிரதமர் நேரு இந்திரா காந்தி. எம்.ஜி.ஆர். காமராஜ். ஆகியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து சென்ற
வரலாற்று சிறப்புமிக்க இடமாக கல்லார் பழப் பண்ணை விளங்கி வருகிறது
மேலும் துரியன் மங்குஸ்தான் ரம்புட்டான் வாட்டர் ஆப்பிள் பலாப்பழம் உள்ளிட்ட அரிய வகை பழங்களும் மூலிகை செடிகளும் மலர்களும் விளைவிக்கிறன
சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்
இதுவரையில் இல்லாத ஆச்சரியம் ஏற்படும் அளவுக்கு அரசு தோட்டக்கலை பல பண்ணையில் உள்ள ஒரு உயரமான இலவம் பஞ்சு மர பொந்தில் இருவாச்சி பறவை கூடுகட்டி குஞ்சு பொரித்து உள்ளது தற்போது வரை இருவாச்சிகுஞ்சுக்கு தாய் இருவாச்சி பறவை உணவளித்து வருகிறது
கடந்த இரு தினங்களுக்கு முன்பு
கல்லார்தூரிப்பாலம் பகுதியில்ஆண் இருவாச்சி பறவை காலில் சிறிய காயம் ஏற்பட்டு குரங்குகள் சூழப்பட்ட நிலையில் பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பின்னர் இருவாச்சி பறவைக்கு வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது...!
இது பறவை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது கல்லார் பகுதியில் இருவாச்சி பறவை குஞ்சுகளை பாதுகாத்திட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் 4 வகையான இருவாச்சிகள் பறவைகள் பெரும்பாத இருவாச்சி மலபார் இருவாச்சி சாம்பல் நிற இருவாச்சி பறவைகள் காணப்படுகிறது இருவாச்சி பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத் தன்மை மிக்ககவை இப்பறவைகள் எச்சங்களால் தான் காட்டில் இருக்கிற மரங்கள் பெருகுகின்றன இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழை காடுகள் என அழைக்கப்படுகிறார்கள் மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாச்சி பறவைகள் இல்லை என பறவை ஆர்வலர்கள் கூறப்படுகின்றன காடு வளர்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கிறன ஆகையால் கல்லார் கூடு கட்டி குஞ்சு இருவாச்சி பறவையை பாதுகாத்திட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என. பறவை ஆர்வலர்கள். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் ...!!
🌳 கேதமிழகம் சேட் ✍️