ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டதுணை இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர்.
திரு.பார்கள் தேஜா IFS
பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்...!
ஆனைமலை புலிகள் காப்பகம். (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் IFS அறிவுறுத்தலின் பேரில்
பொள்ளாச்சி வனக்கோட்டம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு மலைமக்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் வனத்துறையின் சார்பாக பள்ளி குழந்தைகளை ஊக்குளிக்கும் விதமாக ஆண்டு விழா
ஆனைமலை புலிகள் காப்பகம பொள்ளாச்சி வனக்கோட்டதுணை இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர்.
திரு.பார்கள் தேஜா அவர்கள் தலைமையில்
பொள்ளாச்சி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் திரு. செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
முன்னதாக ஆசிரியர் திருமதி வனஜா
பள்ளி குழந்தைகள் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தனர்.
விழாவில் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் முதலிய நடத்தப்பட்டு
துணை இயக்குநர், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர் ஆகியோரால் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆசிரியர்களை பாராட்டும் விதமாக தினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில்
டாப்ஸ்லிப் உலாத்தி வனச்சரக அலுவலர் திரு.மு.சுந்தரவேல் நன்றி கூறினார்
கூடலூர் வனக்கோட்டம்
பந்தலூர் வன சரகம் பந்தலூர் பிரிவு தேவாலா காவல் பகுதிக்கு உட்பட்ட கரியன்சோலை கிராமத்தில் பொது மக்கள் பயன் படுத்தும் பொது கிணறு தூர் வாரும்போது எலும்புகள் இருப்பது கண்டறியபட்டது
தகவலை ஒட்டி
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ்
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர் கே பிரபாகர்.
கூடலூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) வித்தியா ஆகியோர்களின்
அறிவுறுத்தலின் பேரில்
பந்தலூர் வனசரக அலுவலர் சஞ்சீவி.
தேவாலா காவல் ஆய்வாளர்
திருஞானசம்மந்தம்.
நிலாக்கோட்டை காவல் துணை ஆய்வாளர்
நிலாக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர்காவண்யா.
ஊட்டி தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ஆர் ரமேஷ். ஆகியோருடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது மனித எலும்புகள் அல்ல என்பது தடய அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது
கைப்பற்றப்பட்ட எலும்புகளை வன விலங்குகளின் எலும்புங்களா என்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்விற்காக
சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் (AIWC )ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தகவல்
*கோவை மாவட்ட வன ஜெயராஜ் அறிவுறுத்தலின் பேரில் மேட்டுப்பாளையம் வன சரகம் வனவர் முனியாண்டி தலைமையில் வனக்காப்பாளர்கள் நாகராஜ். ராஜ்குமார். ஹக்கீம். ஆகியோர்கள் வழக்கமான வன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கல்லார் துரிப்பாளையம் அருகே இருவாய்ச்சி பறவை ஒன்று லேசான காயத்துடன் சுற்றி குரங்குகள் தொந்தரவு செய்து வந்த நிலையில் இருவாசி பறவையை கைப்பற்றி அரசு கால்நடை மருத்துவர் ராஜாகம் இரு வாய்ச்சிப்பறவைக்கு முதலுதவிசிகிச்சை அளித்து பின்னர்
கல்லார் அடர்ந்த வனப்பகுதியில் இருவாய்ச்சி பறவையை கொண்டு சென்று விட்டனர்..*!!
🌳 கே தமிழகம் சேட் 🌳