உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு மதுக்கரை வனசரகம் சோளக்கரை பீட் வனப்பகுதியில் கல்லூரி மாணவ. மாணவிகள் தூய்மை பணியை மாவட்ட வன அலுவலர் டி கே அசோக்குமார் IFS துவக்கி வைத்தார்..!

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு மதுக்கரை வனசரகம் சோளக்கரை பீட்  வனப்பகுதியில்  கல்லூரி மாணவ.  மாணவிகள்  தூய்மை  பணியை மாவட்ட வன அலுவலர் டி கே அசோக்குமார் IFS துவக்கி வைத்தார்..!

கோவை வனக்கோட்டம் மதுக்கரை வன சரகம் சோளக்கரை பீட் வாளையார் செல்லும் ரயில் பாதையானது 

கேரளா தமிழ்நாடு இரு அடர்ந்த வனப்பகுதி வழியே பிரிந்து செல்லும் இரு பாதைகள் உள்ளன A ட்ராக் மற்றும் B  ட்ராக் இவ்வழியாக  பல்வேறு வெளிமாநில  பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகள் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த ரயில் பாதையில் பயணிகளில் சிலர் காட்டுப் பகுதியில் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பயணத்தின் போது தாங்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட மீதமான திண்பண்டங்கள், காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வனம் சார்ந்த பகுதிகளில் வீசியெறிந்து செல்கின்றனர். 

இதனை இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள், மான்கள், யானைகள் போன்ற விலங்கினங்கள், சிப்ஸ் போன்ற திண்பண்டங்களின் உப்பு சுவைக்காக அவற்றை பிளாஸ்டிக் கவரோடு உட்கொண்டு விடுகின்றன. இதனால், செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி கடும் அவதிக்கு உள்ளாகிறது. என்று கூறப்படுகிறது 

இதனை அடுத்து 

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு

ஆனைமலை புலிகள் காப்பக கோவை இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் IFS  அறிவுறுத்தலின் பேரில்

கோவை மாவட்ட வன அலுவலர் 
டி கே அசோக்குமார்  உத்தரவின் பேரில்

மதுக்கரை வனசரக அலுவலர் சந்தியா மேற்பார்வையில்
வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் ஏற்பாட்டில்
உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு
ரத்தனம் கலை அறிவியல் கல்லூரி.
டாக்டர். எஸ். என். எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி. மாணவ மாணவிகள் 

மதுக்கரை வன சரகம் சோளக்கரை பிட்டில் வாளையார் செல்லும் வனப்பகுதியில்  தூய்மை பணியை 

கோவை மாவட்ட வன அலுவலர் டி கே அசோக் குமார் துவக்கி வைத்து பேசுகையில் 
தமிழ்நாடு பசுமையாக்குதல் திட்டத்தின்படி வருங்காலங்களில் மாணவ மாணவிகள் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை காக்க வேண்டும்

வன உயிரினங்கள் பாதுகாப்பு அதன் வாழ்விடங்களை கல்லூரி மாணவர்கள் தாங்கள் முழுமையாக அறிந்து கொண்டு 

காடு வன உயிரினங்கள் நலன் கருதி
தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

மேலும் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள் நாள் வன உயிரினங்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது எனவும் 

இதனை தடுப்பதற்கு வனத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது இருப்பினும் மாணவ மாணவிகள் பங்களிப்பு மிக  முக்கியமானதாக உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில்

ராக் ரவீந்திரன்
வாஹித் மோகன் , பைசல் , விக்னேஷ் 

ரத்தினம் கல்லூரி ஆசிரியர்கள் சத்குரு  , ஞானசேகர் , சவ்ந்தர்யா , ஆதித்யா , ராகேஷ் மற்றும் Dr Sns ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியர்கள் வெங்கடேஷ்      லாவண்யா , சண்முக பிரியா. மற்றும் வன உயிரின ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர் 

நிகழ்ச்சி முடிவில்

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன். நன்றி கூறினார்

🌳 கே தமிழகம் சேட் ✍️