சிறந்த இயற்கை வன காப்பாளர் திரு.தெங்குமரஹாடா R.ராஜேந்திரன் வனப்பணி நிறைவு நாள் விழாவில் வனசரக அலுவலர் செந்தில்குமார் சான்றிதழை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..!!

சிறந்த இயற்கை வன காப்பாளர் திரு.தெங்குமரஹாடா R.ராஜேந்திரன் 
வன காவலர்வனப்பணி நிறைவு நாள் விழாவில்
 சிறுமுகைவனசரக அலுவலர் செந்தில்குமார் சான்றிதழை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் தெங்குமரஹாடா வன சரகங்களில்  பல ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி. தன்னார்வலர்கள் உதவியுடன். வன உயிரினங்கள் தண்ணீர்குடிப்பதற்கு வனப்பகுதியில் உள்ள தரைதொட்டிகளைசீர் செய்தும். 
வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மற்றும் பழங்குடியின மக்களுக்கும். அரிசி மள்ளிகை பொருள்கள். காய்கறிகள்  டி சர்ட். பேண்ட். வேஷ்டி சேலைகள். மற்றும்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் 


வன உயிரினங்களை பாதுகாத்தும் பல ஆயிரக்கணக்கில் நாற்றுக்களை உருவாக்கி அதனை மரமாக வளர்த்தி வருவதுடன் 
பொதுமக்களுக்கும் வனத்துறைக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டு சமூக நலன் காத்து அனைவரிடம்  இன்றளவும்
பாராட்டு  பெற்று வரும் 

சிறந்த இயற்கை வன காப்பாளர் திரு.தெங்குமரஹாடா R.ராஜேந்திரன் அவர்கள் வன காவலர்பணி நிறைவு பெறுகிற நிகழ்ச்சி 

சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி

 சான்றிதழை வழங்கி வேட்டை தடுப்பு காவலர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

 தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 

தெங்கு மரஹாடா ராஜேந்திரன் ஆற்றிய வனப்பணி குறித்து. வனவர் கோபிநாத். சுரேந்திரன். முனியாண்டி. வனக்காப்பாளர்கள் தங்கராஜ். நித்தியானந்தன். வனக்காவலர்கள் 
வேட்டை தடுப்பு காவலர்கள். உள்ளிட்டோர் வரும் காலங்களில் இவரது வன அனுபவத்தை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறுவதுடன்  முன்னோட்டம் என வாழ்த்தி பேசினார்கள்

இந்த நிகழ்ச்சியில்

சேனாதிபதி மாத இதழ் தமிழகம் நியூஸ் 7. தலைமை நிருபர் 
கே தமிழகம் சேட்

போர் முரசு மாத இதழ் அரசியல் பழகு. ஆசிரியர் வெளியிட்டார் பெருஞ்சித்தன்.

பவர் நியூஸ்
வின் எக்ஸ்பிரஸ் செய்தி குழுமம் பொறுப்பாசிரியர்.
S பாஷா.

பத்திரிகையாளர்கள் அசோகன். உலக தொலைக்காட்சி முருகேஷ்.

ராமநாதபுரம் மாவட்ட சர்வ பத்திரிக்கை நிருபர் பாகர். ஷானவாஸ் அபிபுல்லா.
வன உயிரின ஆர்வலர்கள். மைனர் இதயத்துல்லா. எல். எஸ். புரம் ரவி வண்ணம் கந்தசாமி. ஈரோடு டாக்டர் அப்துல்லா ரவி கவுண்டர்..
பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார். சித்திக்லேத் ஆனந்த். முன்னாள் வனக்காப்பாளர் வாசுதேவன்.JP. ஹாலோ பிளாக் கம்பெனி இயக்குனர் சரத்குமார். 
இருசக்கர வாகன இன்ஜினியர் சிவகுமார்.
மலர் விஸ்வநாதன். வன உயிரின மற்றும் சமூக ஆர்வலர்  திருநங்கை பிரிதிஷா
 ஆகியோர்கள்
 வாழ்த்தினார்கள் .

முன்னதாக முன்னாள் அமைச்சர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் 
ஏ. கே. எஸ். செல்வராஜ்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் ஆகியோர்கள் தெங்குமரஹாடா ராஜேந்திரன் வனபணி நிறைவையொட்டி  அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள் 
பவர் நியூஸ். வின் எக்ஸ்பிரஸ் செய்தி குழுமம் பத்திரிக்கையாளர் சார்பாக மற்றும் CITU பொதுத் தொழிலாளர்கள் சார்பாக  சிறந்த வன பணி சேவையை பாராட்டி திரு.தெங்குமரஹாடா ராஜேந்திரனுக்கு பாராட்டி கேடயம் வழங்கினார்கள்  
மேலும் வனத்துறை உயர் அதிகாரிகள். வன உயிரின ஆர்வலர்கள். திரு.தெங்கு மரஹாடா ராஜேந்திரனுக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்தார்கள்

🌳 கே தமிழகம் சேட் ✍️