மேட்டுப்பாளையம் வனசரகத்தில் விதிமுறைகளை மீறி வேட்டை தடுப்பு காவலர்கள் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணி சுமை போக்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?

மேட்டுப்பாளையம் வனசரகத்தில் விதிமுறைகளை மீறி வேட்டை தடுப்பு காவலர்கள் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணி சுமை போக்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?


தமிழ்நாட்டில் வனத்துறையின் கடை நிலை ஊழியர்களுக்கு பெயர் வேட்டை தடுப்புக் காவலர்கள். வனத்துறையில் வனசரக அலுவலர்கள். வனவர்கள். வனக்காப்பாளர்கள்   வனக்காவலர்,  எனஇருந்தாலும் காடுகள்குறித்த அனைத்து தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருப்பவர்கள்  வேட்டைதடுப்புக் காவலர்கள்தான். எனவே 

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருக்கிற காடுகளில் வேட்டைதடுப்புக் காவலர்கள்தங்களின் பணிகளை செய்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுகென்று ஒதுக்கப்பட்ட காடுகளுக்கு சென்று புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் வாழும் வனத்தை பாதுகாப்பது, வனப்பகுதிகளுக்கள் உள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் தங்கி கண்காணிப்பது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு யானை, சிறுத்தை. காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வரும்போது வனத்துறையினரோடு இணைந்து அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்புவது, வனப்பகுதிக்குள் யாராவது வன உயிரினங்களை வேட்டையாடுவது. கஞ்சா போன்ற போதைபயிர்களை பயிரிடும்போது அவற்றை கண்டுபிடித்து  வனஉயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி யானைகள் இறந்தால் அவற்றை பிரேத பரிசோதனை செய்யும்போது முழு உதவியாளராக வேட்டைதடுப்பு காவலர்களே இருக்கின்றனர்.வனப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் வனக்கொள்ளையர்களுக்கிடையே தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வரும் வேட்டை தடுப்பு  காவலர்களுக்கு ரூபாய்.
 12 ஆயிரத்து 500 ரூபாய்   சம்பளமாக  வழங்கப்படுகிறது 

மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு  பணி சுமை கிடையில்   குடும்ப சூழலை . நலன் கருதி அரசு நிரந்தர வன காவலர் பணி கிடைக்கும் என்று நோக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறனர் 

இந்த நிலையில்
கோவை வனக்கோட்டத்தில்
கோவை வளம் குன்றிய காடுகள் மேம்படுத்தவும் 
விவசாயிகள் தோட்டம். நகராட்சி. உள்ளாட்சி பகுதியில் உள்ள அரசு சொந்தமான ரிசர்வ் நிலங்களிலும் நடவு செய்வதற்காக 
மூங்கில். மகாகனி. தனக்கு. கீழே வை. நெல்லி. புங்கன். கொடுக்காப்புளி. வேம்பு.. தேக்கு. மற்றும் பகுதிக்கு ஏற்றவாறு நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது
பசுமையாக்குதல் திட்டம் மற்றும் நபார்டு வங்கி நிதி பங்களிப்புடன்   நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது 

 இதில் கோவை வனக்கோட்டத்தில் வனத்துறை நாற்றங்கால் தவிர நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கு மற்ற விவசாயி தோட்டங்களை. தனியார் இடங்களை வாடகைக்கு எடுத்து. நாற்றுக்கள் போடுவதற்கு மண். பை. விதை.நாற்று உற்பத்தி செய்யும் நபர். செடிக்கு தண்ணீர் ஊற்றும் . நபர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்  சம்பளம். நாற்றை ஏற்றிக்கொண்டு  போகும் வாகனங்கள் போக்குவரத்து செலவு உட்பட இதன் தொகை முழுவதும் தமிழ்நாடு அரசு வனத்துறை வழங்குகிறது மேலும் இந்தப் பணியில் வனத்துறை பணியாளர்கள் அரசு சம்பளம் வாங்கும் நபர்கள் இந்த பணியில் ஈடுபடக்கூடாது என அரசு  விதியும் உள்ளது

இதை கோவை வனக்கோட்டத்தில் ஒரு சில பகுதிகள் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 

மேட்டுப்பாளையம் வன சரக பகுதியில் மட்டும் விதிமுறைகளுக்கு மாறாக 
வனசரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நாற்று உற்பத்திகள் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வருகிறன .

மேலும் இந்த வன சரகத்தில் வன சாலை ஓட்டி உள்ள பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் வீசி செல்லும் மது பாட்டில்கள் குப்பைகளை எடுப்பதற்கு மாவட்ட வன அலுவலர் சிறப்பு நிதி வழங்கி வருகிறன 
ஆனால் இந்தப் பணியிலும் வேட்டை தடுப்பு காவலர்களை ஈடுபடுத்தி வருகிறன 

இதனால்  வேட்டை தடுப்பு காவலர்கள் யானை விரட்டும் பணியில் ஈடுபடாமலும் வனப்பகுதியில்  செல்லாமல் இருப்பதால் வன குற்றங்கள் நடைபெற வாய்ப்பு அதிகமாக இருப்பதால். மனித- யானை மோதல்  ஏற்படுகிற சூழ்நிலை இருப்பதாலும்

வனப்பணியில் பத்தாண்டுகளுக்கு மேல்குறைந்த சம்பவத்தில் பணி நிரந்தரம் இல்லாமல் வன வேட்டை தடுப்பு காவலர்கள் வனப் பணியில் சிறந்த முறையில் ஈடுபட்டு வரும் நிலையில் 

இது போன்று பணி சுமைகள் அதிகமாக ஈடுபடுத்துவதால் ஒரு சிலர வேலை விட்டு மாடு மேய்த்து பிழைத்துக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆகையால் நாற்று உற்பத்தி செய்யும் பணிகளுக்கு அரசு போதிய தொகை வழங்கியும் வேட்டை தடுப்பு காவலர்களை அந்தப் பணியில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்..? இந்த வனசரகத்தில் போதிய வருமானம் இருந்தும் வேலை செய்யும் நபர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட வாங்கி கொடுப்பதில்லை என்றும் கோத்தகிரி சாலையில் உள்ள டீக்கடையில் தங்களுடைய மனக்குமுறல்களை  வெளிப்படுத்தி  வருகின்றனர்...!!


ஆகையால்  வேட்டை தடுப்பு காவலர்கள் பணி சுமையை போக்கவும்  யானை காட்டு மாடு மான் வன உயிரினங்கள் தாகத்தைப் போக்க வனத்துறையில் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளை தூர் வாரியம். தண்ணீர் தொட்டி கசிவுகளை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்ப வேண்டும். என


ஆனைமலை புலிகள் காப்பக கோவை இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் 

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் 

ஆகியோர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வன வேட்டை தடுப்பு காவலர்கள் வேதனை போக்குவார்களா. என்று  சமூக. மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!

🌳 கே தமிழகம் சேட் ✍️