மேட்டுப்பாளையம் அருள்மிகு குஞ்சப்பனை ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயில்அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா.திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மேட்டுப்பாளையம் அருள்மிகு குஞ்சப்பனை 
ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயில்
அஷ்டபந்தன மஹா 
கும்பாபிஷேக பெருவிழா.திரளான பக்தர்கள் பங்கேற்பு.. 

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் மிகவும் பழமையான அருள்மிகு குஞ்சப்பனை ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் பல லட்சங்கள் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு அருள்மிகு குஞ்சப்பனை 
ஸ்ரீ மகாமாரியம்மன், ஆதிமூலவர், விஷ்ணு, துர்க்கை, பரிவார மூர்த்திகள், நவ கிரஹங்கள்,ஸ்ரீ மகா மாரியம்மன் விமானம், நவக்கிரஹ விமானம் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிவ ஸ்ரீ.ஞா.அஸ்வின் சிவாச்சாரியார்
தலைமையில் கடந்த மூன்று தினங்களாக யாக பூஜைகள் நடைபெற்றது.
அதனையடுத்து  காலை யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் கோவில் நிர்வாகத்தினரால் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு பூஜைகள் செய்து புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.

பின்னர்,பக்தர்கள் மீதும் புனித நீரானது தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில்  மேட்டுப்பாளையம் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

விழாவினை முன்னிட்டு மூன்று தினங்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவினை அருள்மிகு குஞ்சப்பனை 
ஸ்ரீ மாரியம்மன்
கோவில் நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்...!!

🌳 கே தமிழகம் சேட் ✍️