விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்த 3 காட்டுயானைகள் உயிரிழந்ததை அடுத்துவிவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டார்.! வனசரக அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பாரா வன பாதுகாவலர் திரு.பெரியசாமி....?

விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்த 3 காட்டுயானைகள் உயிரிழந்ததை அடுத்து
விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டார்.

வனசரக அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பாரா வன பாதுகாவலர் திரு.பெரியசாமி....? 
தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அவற்றை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது..

இந்த நிலையில், காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வனவிளங்குகள் நுழையாமல் தடுப்பதற்காக  விவசாயி முருகேசன் என்பவர் மின்வேலி அமைத்துள்ளார். 

இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சுற்றிக்கொண்டிருந்த 3 காட்டுயானைகள் தவறுதலாக மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

உயிர் தப்பிய 3 குட்டி யானைகள் இறந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தன. இது குறித்து வழக்கம்போல தகவல் அறிந்த வந்த பாலக்கோடு வனத்துறையினர் யானைகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தது பெண் யானைகள் என தெரியவந்துள்ளது. 
இது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் பாறைகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் அருகே உள்ள மின்கம்பத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்துள்ளதை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்ததற்காக முருகேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

யானைகள் நடமாடும் இடத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பதை வனசரக அலுவலர்  தலைமையில் வனத்துறையினர்  கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த யானைகள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் 

கடந்தாண்டு காட்டு யானை மின்கம்பி தாக்கி உயிரிழந்த நிலையில் தர்மபுரி வன பாதுகாவலர் பொறுப்பு  திரு பெரியசாமி அவர்கள் வனசரக அலுவலர் மீது தற்காலிக பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார் 

தற்போது மூன்று காட்டி யானைகள் உயிரிழந்த நிலையில் வனசரக அலுவலர் மீது  நடவடிக்கை எடுப்பாரா...?

எனவும் மாண்புமிகு நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த யானைகள் உயிரிழப்பை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன உயிரின ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்து  உள்ளனர்..?  

இதனிடையே உயிரிழந்த யானைகளின் உடலை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த யானைகள் அருகே சுற்றித் திரியும் குட்டி யானைகள் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️