நீலகிரி வட மாநில தொழிலாளர்கள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் எந்நேரமும் காவல்துறை தயங்காமல் அணுகலாம் நீலகிரி எஸ் பி முனைவர் பிரபாகரன் தகவல்...!

நீலகிரி வட மாநில தொழிலாளர்கள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் எந்நேரமும் காவல்துறை தயங்காமல் அணுகலாம் நீலகிரி எஸ் பி முனைவர் பிரபாகரன் அவர்கள் தகவல்...!

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் உள்ளிட்ட பிற தொழில்களில் சுமார் 10.000 ஆயிரத்துக்கும்0 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறனர் 

இந்நிலையில் ஊட்டி யில் கட்டப்பட்டு வரும் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியில் 
ஈடு பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களை 

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் அவர்கள் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசினார். 

அப் போது அவர் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்ப டுவதாக கூறப்படும் சம்ப வங்கள் உண்மையில்லை. அவ்வாறு பரப்பப்படும் வதந்திகளை நீங்கள் 
எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். 
சமூக வலை தளங்களில் பரவி வருவது வதந்தி என உங்கள் ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லை  மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய  நாங்கள் காவல்துறை தயாராக உள்ளோம். யாருக்காவது ஏதேனும்
பிரச்னை ஏற்பட்டால் என்றால் 24 மணிநேரமும் காவல்துறையினர் உதவியை நாடலாம்.  இதற்காக தனிப்பிரிவு கட்டுப்பாடு அறை எண்களும் பயன்பாட்டில் உள்ளன. கட்டுமான பணியில் ஈடு பட்டுள்ள நீங்கள் வழக்கம் போல விடுமுறை தினங்களில் ஊட்டி மார்க்கெட் டுக்கு வந்து தேவையான பொருட்களை தைரியமாக, : வாங்கி செல்லலாம். 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகரன் அவர்கள், எஸ்பி கூறினார்.  

அப்போது ஊட்டி டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் யசோதா, காவல் ஆய்வாளர் சரஸ்வதி. காவல்துறையினர் உள்பட பலர் உடனிருந்தனர்.

கோவை
கோவை இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரி நாராயணன்  அவர்கள் பாராட்டு...*

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் PC 815திரு. சின்ராஜ் மற்றும் PC 930 திரு. சீனிவாசன் 

ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடினர். அவர்களை காவலர்கள் துரத்தி அதில் ஒருவரை பிடித்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் 

கத்தி-1, பெரிய இரும்பு கம்பி-1 ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பிடிபட்டவரை விசாரிக்க அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (30) என்பது தெரியவந்து, மேற்படி நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இரவு அலுவலில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும்  வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை கோவை மாவட்ட  காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், IPS  அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் பகுதியில் கடந்த மாதம் ராஜஸ்தானை சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட கொள்ளை கும்பல் ஏடிஎம்களை உடைத்து ரூ. 72 லட்சத்தை கொள்ளையடித்து தப்பியது.

சென்னை வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில்

வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் முத்துச்சாமி மேற்பார்வையில்

 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
 .கார்த்திகேயன், 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
.ராஜேஷ்கண்ணன், 

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ரூதி, ஆகியோர்கள் தலைமையில் 
7 தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் சென்று 5 கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

இந்த நிலையில் 14-ம் தேதி கர்நாடக மாநில எல்லையில் ராஜஸ்தான் மாநிலம் தல்வார் மாவட்டம் ஜவாந்தி சூர்த் கிராமத்தை சேர்ந்த 6-வது கொள்ளைக்காரன் சிராஜிதீனை (50) தமிழக காவல்துறையினர் கைது செய்துகொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்தனர்.


🌳 கே தமிழகம் சேட் ✍️