பர்கூர் இயற்கையான முறையில் குட்டி ஆண் யானை இறப்பு வனத்துறை தகவல்...!!

பர்கூர் இயற்கையான முறையில் குட்டி ஆண் யானை இறப்பு வனத்துறை தகவல்...!!
ஈரோடு மாவட்ட வனபாதுகாவலர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்

ஈரோடு வன கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில்

பர்கூர் வனசரக அலுவலர் பிரகாஷ் மேற்பார்வையில் வனவர் வனக்காப்பாளர்கள் வன காவலர்கள் வேட்டை காவலர்கள் உட்பட
பர்கூர்  வன சரகத்தில் உள்ள  
பர்கூர். தாமரைக்கரை. தேவர் மலை.பெஜலட்டி. சேனைக்கரை. செங்குளம் கோயில் நத்தம். பெரியூர். ஆகிய வன பீட்டுகளில் வன உயிரினங்கள் நலன் கருதியும் வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் வாகன சோதனைகள் ஈடுபடுவதும் வனப்பகுதியிலும்  தீவிர ரோந்து  பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
 

இதனைத் தொடர்ந்து வட பர்கூர். காப்புக்காடு காவல் சுற்று காரணமலை பள்ளம் பகுதியில் இயற்கையாக சுமார் ஐந்து வயதுடைய குட்டி ஆண்யானை ஒன்று இறந்து கிடந்ததை  கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில் வனசரக அலுவலர் பிரகாஷ். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் பர்கூர் கால்நடை மருத்துவர்கள். சுரேஷ் பாரத். வனவர். வனக்காப்பாளர். பர்கூர் கிராம வனக்குழு உறுப்பினர் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு இரண்டு தந்தங்களை  எடுத்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர் ..!

🌳 கே தமிழகம் சேட்  ✍️