கோவையில்
ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக காவல்துறையினருடன் ஒரு நாள் நிகழ்வு... பங்கேற்ற பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி..
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்
என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து
அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (09.12.2022) மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் காவல்துறையினருடன் ஒரு நாள்(A DAY WITH POLICE ) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.எம்.எஸ். முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,இ.கா.ப. அவர்களும் கலந்துகொண்டு
கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில பயிலும் 31 மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினார்கள்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் PRS வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள காவலர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டும், அதனை எவ்வாறு கையாள்வது பற்றியும் தெரிந்து கொண்டு அதனை கையாண்டனர். அதனைத் தொடர்ந்து கோவை Rifle Club-ஐ பார்வையிட்டனர்.
அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்க்கு இடையிலான வித்தியாசம் பற்றி மாணவ, மாணவியருக்கு உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். மாணவிகள் ஆர்வத்துடன் துப்பாக்கிகளை எடுத்து குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவியர்களுக்கு இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்கள்.
மேலும் காவல்துறையினர் நண்பர்கள் போல் பழகுகிறார்கள் என கூறினார்கள். மாணவியருக்கு போலீசாரின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மனதளவில் வலுப்படுத்தி பாலியல்
குற்றங்கள் இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடந்து நடத்துவதற்கு கோவை மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோவையில்
ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக காவல்துறையினருடன் ஒரு நாள் நிகழ்வு... பங்கேற்ற பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி..
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு சுதாகர் மாணவிகளுக்கு அறிவுரை...!!
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்
என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து
அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (09.12.2022) மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் காவல்துறையினருடன் ஒரு நாள்(A DAY WITH POLICE ) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.எம்.எஸ். முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,இ.கா.ப. அவர்களும் கலந்துகொண்டு
கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில பயிலும் 31 மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினார்கள்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் PRS வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள காவலர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டும், அதனை எவ்வாறு கையாள்வது பற்றியும் தெரிந்து கொண்டு அதனை கையாண்டனர். அதனைத் தொடர்ந்து கோவை Rifle Club-ஐ பார்வையிட்டனர்.
அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்க்கு இடையிலான வித்தியாசம் பற்றி மாணவ, மாணவியருக்கு உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். மாணவிகள் ஆர்வத்துடன் துப்பாக்கிகளை எடுத்து குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவியர்களுக்கு இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்கள்.
மேலும் காவல்துறையினர் நண்பர்கள் போல் பழகுகிறார்கள் என கூறினார்கள். மாணவியருக்கு போலீசாரின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மனதளவில் வலுப்படுத்தி பாலியல்
குற்றங்கள் இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடந்து நடத்துவதற்கு கோவை மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் 60 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பத்ரி நாராயணன் திறந்து வைத்தார்
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு சுதாகர். கோவை சரக காவல்துறை துணை தலைவர் முனைவர்
திரு முத்துசாமி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. பத்ரி நாராயணன், இ.கா.ப.அவர்கள் உத்தரவின் பேரில்
கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் பொருட்டு செயல்படக்கூடிய மூன்றாவது கண்ணான CCTV கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட புறநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறன.
அதன் அடிப்படையில் இன்று (09.12.2022) மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30 இடங்களில், 60 கண்காணிப்பு CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்கள், காவல் ஆய்வாளர், நவநீதகிருஷ்ணன். காவல் துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள். பொதுமக்களும் பங்கேற்றனர். இதேபோல் கடந்த 12.08.2022 -ஆம் தேதி குற்றங்கள் அதிகம் நடைபெறக்கூடிய 10 இடங்களில் 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்கள் திருடு போனாலோ அல்லது ஏதேனும் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் எளிதில் கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது என்றும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்ததன் மூலம் பல்வேறு வழிப்பறி மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குற்ற செயல்களை நடவாமல் தடுப்பதற்கும் குற்றங்களை குறைப்பதற்கும் 420 கண்காணிப்பு CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தன.
🌳 கே தமிழகம் சேட் ✍️