தாளவாடிதமிழக மற்றும் கர்நாடக எல்லையான கும்பாரகுண்டி பகுதியில் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் வனசோதனைச் சாவடியை இயக்குனர் ராமசுப்பிரமணியம் I FS திறந்து வைத்தார்..!

தாளவாடி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்
குட்பட்ட பகுதியில் ஏராளமான காட்டு யானை..புலி. கழுதைப்புலி.. சிறுத்தை.. கரடி .காட்டு மாடு .மேலும் அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகிறனர் வன உயிரினங்கள் தொடர்பான சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரங்களில் நடைபெறக்கூடிய செயல்களை கட்டுப்படுத்த தமிழக மற்றும் கர்நாடக எல்லையான கும்பாரகுண்டி பகுதியில் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் வனசோதனைச் சாவடியானது அமைக்கப்பட்டு உள்ளது இதனை 

ஆனைமலை புலிகள் காப்பகம் இயக்குனர் மற்றும்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் பொறுப்பு
 கள இயக்குநர் இராமசுப்ரமணியன் IFS  திறந்து  வைத்து வனப்பணியாளர்களுக்கு அறிவுரை கூறினார் 

இந்த நிகழ்ச்சியில்
ஆசனுார் வனக்கோட்டத்தினுடைய துணை இயக்குநர் தேவேந்திரகுமார் மீனா IFS 

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக்கோட்டத்தின் துணை இயக்குநர் கிருபாசங்கர் IFS . 

தாளவாடி வனச்சரக அலுவலர் சு.சதீஷ் நிர்மல் ஆசனூர் வனப்பாதுகாப்புபடை வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வனவர்கள் மா.பெருமாள், மு.மாரிமுத்து மற்றும் வனப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் இயக்குனர் ராமசுப்பிரமணியம் ஆசனூர் வன சரக அலுவலர் சிவகுமாரிடம். வன உயிரினங்கள் நலன் கருதி. இரவு நேரங்களில் வாகனங்கள் சாலையில் நிறுத்தாமல் இருக்கவும் இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்துங்கள் இந்தப் பகுதியில் நேரம் கடந்து சாலையில் நிற்கும்  வாகன சோதனையில் அதிக அபதாரம்  விதித்துள்ளதை பாராட்டினார். 

மேலும் ஆசனூர் ஈ.கோ. டூரிசம் வனசரக அலுவலர் ரவீந்திரரிடம் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களை  கேட்டறிந்தார்.

கேர்மாளம் வன சரக  பகுதியில் வன குற்றம் நடைபெறாமல் இருக்க இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என  அறிவுறுத்தினார்...!

🌳 கே தமிழகம் சேட் ✍️