*பவானிசாகர் வன சரகத்தில் தலைமலை காப்புக்காடு கொத்தமங்கலம் பிரிவு. மற்றும் காராச்சிக்கொரை வனப்பகுதியில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற 6 நபர்கள் கைது...!!*



*சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் பொறுப்பு மற்றும் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் கிருபாகரன் உத்தரவின் பேரில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார்  தலைமையில்*,

*கொத்தமங்கலம் பிரிவு, வனவர் எல்.கர்ணன், பண்ணாரி காவல் சுற்று வனக்காப்பாளர் வி.ஞானம் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு தலமலை காப்புகாடு, கொத்தமங்கலம் பிரிவு பண்ணாரி காவல் சுற்று வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு வரும் போது மூன்று நபர்கள் வன உயிரினங்களை வேட்டையாட இரும்பு சுருக்கு கண்ணிகள், பிரேக் ஒயரால் ஆன சுருக்கு கம்பிகள் கட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் மாமரத்து பகுதியை சேர்ந்த வெள்ளையன் ரங்கசாமி, மாமரத்து முருகேஷ்  என்பதும் தெரியவந்தது* 

*பின்னர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக மூவரும் விசாரணை செய்து கைது செய்த பின்னர். நீதிமன்றத்தில் ஆஜபடுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்*


*மேலும் பவானிசாகர் வனச்சரக வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் காராச்சிக்கொரை பேருந்து நிலையப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காராச்சிக்கொரை பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் இருப்பதை கண்டு அவர்களை பிடித்து கையில் வைத்திருந்த கட்டைபையை பிரித்து சோதனை செய்த போது ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளே ஒரு துண்டில் எறும்பு திண்ணி (அலுங்கு) ஓடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது*. 
*மேலும் பிடிபட்ட எதிரிகளை விசாரணை செய்த போது எதிரி அல்லி மாயார் சிவக்குமார்  சிறியூர் அருண் (என்பது விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட எதிரிகளிடம் மேலும் விசாரணை செய்த போது இக்குற்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மற்றொரு எதிரி அல்லி மாயர் கோபால்  என்பது தெரியவந்தது. மேலும் பிடிப்பட்ட மூன்று எதிரிகளை கைது செய்து* *சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டது. பின் நீதிமன்ற நடுவரின் உத்தரவுபடி எதிரிகளை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது*.

🥦 *கே தமிழகம் சேட்* ✍️