வன பணியாளர்கள் நியமிக்கவும். வன ரோந்து பணி செல்வதற்கு புதிய ஜீப் நவீன ரக உபகரணங்களை வழங்கவும் பழங்குடியினர் அருங்காட்சியகம். வேழம் இயலியல் பூங்கா திறக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை....!

தமிழக வனத்துறையில் வன பணியாளர்கள் நியமிக்கவும். வன ரோந்து பணி செல்வதற்கு புதிய ஜீப். நவீன ரக உபகரணங்களை வழங்க. மாண்புமிகு முதலமைச்சர் 
மு. க .ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள். பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..!!

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு 
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை   கூடுதல் செயலாளர் திருமதி சுப்ரியா சாகஹு. 

தமிழ்நாடு முதன்மை வனத்துறை தலைவர் மற்றும் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி
தமிழ்நாட்டில் வனத்துறையை மேம்படுத்தவும்.

புதிதாக வன சரணாலயங்கள், சதுப்பு நில காடுகள், வனப்பரப்பை அதிகப்படுத்தவும்

 காடுகள், விலங்குகள், பறவைகள். தாவரங்கள். உள்ளிட்டவற்றை  மேம்படுத்தவும். காடுகள் பரப்பளவு அதிகப்படுத்தவும் . மனித-யானை. மற்றும் உயிரினங்கள். மோதலை தவிர்க்கவும். வன உயிரினங்கள் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் இதனால் பொதுமக்கள் வனஉயிரினங்கள் ஆர்வலர்கள் தமிழக அரசை பாராட்டி வருகிறன...!!

இருப்பினும் தற்போது இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வனத்துறையில் பல்வேறு குறைகள் இருப்பதாக அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என அந்தந்த பகுதியில் உள்ள வன உயிரின ஆர்வலர்கள். பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கைகளை 
. சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை சிலவற்றைப் பார்ப்போம்....!!!


🌳 கோவை வனக்கோட்டத்தில்  மேட்டுப் பாளையத்தில் யானைகளின் வாழ் வியல் முக்கியத்தும் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து. மாணவ மாணவிகளுக்கு பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் வனத் துறை சார்பில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில்  வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. 

மேட்டுப்பாளை யத்தில் இருந்து கோத்தகிரி செல் லும் சாலையில் உள்ள வனத்து றைக்கு சொந்தமான அரசு மரக் கிடங்கு வளாகத்தில் இப்பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வேழம் இயலியல் பூங்கா திட்டம் முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்வேழம் இயலியல் பூங்காவில் அமைக்கப் பட்டிருந்த பொம்மை காட்டு யானைகளை சேதப்படுத்திய வருகிறது 
இந்த பூங்காவை போதிய நிதியை கொண்டு சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்..!

🌳 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வன சரகம் காராச்சி கொரை வனப்பகுதியில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
நம் சங்க இலக்கியம் மற்றும் காலாச்சாரத் தில் பழங்குடியினர் வாழ்ந்த வரலாறு போன்றவற்றை. மாணவ மாணவிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக குடிசை குடியியல் சுவர் ஓவியங்கள், 
சிற் பங்கள், அரிய புகைப்படங்கள், 
இந்த பூங்காவில் வைக்கப்பட்டு இப்பணிகள் ஏறத் தாழ 80 சதவிகிதம் வரை நிறை வடைந்தும் விட்டது.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக  இப்பணிகள் அனைத்தும் நிறுத் தப்பட்டு உள்ளது இதனால் அப்பகுதியில் பழங்குடியினர் மாதிரிகுடில்கள் சேதம் ஏற்பட்டு புதர்கள் அடைந்து உள்ளது. ஆகையால் பழங்குடி இன அருங்காட்சியகத்தை
போதிய நிதியை கொண்டு
 பழங்குடியினர் அருங்காட்சியகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்..!





🌳 வனப்பணியில் சுமார் 25 ஆண்டுகளாக 260. நபர்கள் தற்கால சூப்பர் நியூ மரி
தோட்ட காவலராக  பணிபுரிந்தவர்கள் சுமார் 200 பேர் மிக பணியாளராக 
தேர்வு செய்த பின்னர்
 சுமார் 60 நபர்களுக்கு மிக பணியாளராக காவலர்கள் பதவி வழங்கப்படவில்லை..!


🌳 தமிழ்நாடு  முழுவதும் வன வேட்டை தடுப்பு காவலர்கள் தற்காலிகமாக சுமார் 1200 நபர்கள் வனப்பணி ஆற்றி வரும் நிலையில்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்தாண்டுகள் தின கூலியாக பணி நிறைவடைந்த வன வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 243 நபர்களுக்கு சென்னை சைதாப்பேட்டை பனகள் மாளிகை தலைமை வனத்துறை அலுவலகத்தில்கோப்புகள் சரிபார்க்கப்பட்ட பின்னரும் இவர்களுக்கு   வன காவலர் நிரந்தர பதவி இன்னும் நிரப்பப்படவில்லை மேலும் ஊதியம் உயர்த்தப்படவில்லை....!

மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா  தூத்துக்குடி. தனுஷ்கோடி. ராமநாதபுரம் கடல் சார்ந்த பகுதிகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக 
நேஷனல் பார்க் கோரல் கடல் பகுதிகளில்  சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் வாட்சராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறனர் இவர்களுக்கு நிரந்தர பணி நியமனம் சம்பள உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

🌳ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை சத்தியமங்கலம்.
களக்காடு முண்டந்துறை. மதுரை
 கள இயக்குனர்களுக்கான பதவி காலியாக உள்ள இடங்களை கள இயக்குனர் நியமிக்க வேண்டும்..!

🌳 தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் உள்ள கடந்த ஆண்டில் வனசரக அலுவலர்கள் மாவட்ட உதவி வன  பாதுகாவலராக பதவி உயர்வு பெற்ற  நிலையில் ஒரு சிலருக்கு பணிகள் வழங்கப்பட்டு ஒரு சிலருக்கு இன்னும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட வேண்டும்....!

🌳கீழ்நிலை அலுவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றுவது காடுகளையும் வன உயிரினங்களையும் பாதுகாக்க உதவும் என்ற நோக்கில் 
மூன்றாண்டுகள் மேல் பணியாற்றிய வனசரக அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்த நிலையில். 

ஒரேமாவட்டத்தில் வனவர். வனசரக அலுவலர். மாவட்ட  உதவி வன பாதுகாவலராக பதவி உயர்வு பெற்ற பின்னரும் சொந்த மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறனர் இவர்களுக்கு இன்னும் பணியிடம் மாற்றம் வழங்கப்படவில்லை..!


🌳கிருஷ்ணகிரி. ஓசூர். தர்மபுரி. ஸ்ரீவில்லிபுத்தூர். முண்டாந்துறை களக்காடு. சேலம். ஈரோடு. சத்தியமங்கலம். ஆசனூர். கோவை. மதுக்கரை. பெரியநாயக்கன்பாளையம். பொள்ளாச்சி வால்பாறை.நீலகிரி. ஊட்டி வடக்கு. தெற்கு. குந்தா. பார்சன்ஸ் வேலி. பைக்காரா.
கீழ் கோத்தகிரி. மசனகுடி. சீகூர்
 சிங்கார. கூடலூர் பந்தலூர் தேவாலா. நாடுகாணி. குன்னூர். மற்றும் இதர பகுதிகளில் காட்டு யானை. புலி. சிறுத்தை. கரடி. காட்டுமாடு. போன்ற வனஉயிரினங்களால் மனித -மோதல் மற்றும். உயிர்இழப்புகள் பயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறனர் இதற்கு அரசு  இழப்பீடு நிவாரணம் வழங்கினாலும் அந்தந்த வனசராக பகுதியில் ரோந்து செல்வதற்கு பழைய வாகனம் உள்ளது மேலும் போதிய நவீனஉபகரணங்கள் இல்லை. மனித வன உயிரினங்கள் மோதுதலை தவிர்க்கவும் வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் ரோந்து பணிக்கு பழைய ஜீப்புகளை மாற்றி புதிய நவீன ரக ஜீ ப் வாகனம். நவீன ரக உபகரணங்கள் போதிய நிதி  வழங்கிடவும். மனித - வன உயிரினங்கள் பிரச்சனை உள்ள மேற்கண்ட  வன சரகங்களில் போதிய வனசரக அலுவலர்கள் வனவர்கள் இருந்த போதிலும்.  வனக்காப்பாளர்கள் வனகாவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் அதிக அளவு  நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும்
இதனால் மேலும் வனத்துறைக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் இருக்கும் 

இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் வனத்துறை சிறப்பாக இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது  

ஆகையால் வன உயிரினங்கள் பொதுமக்கள் நலன் கருதி

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கூடுதல் செயலாளர். திருமதி சுப்ரியா சாஹு. 

தமிழ்நாடு முதன்மை வனத்துறை தலைவர். தமிழ்நாடு முதன்மை வன உயிரின காப்பாளர் ஆகியோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்....!!!

🌳 கே தமிழகம் சேட்  ✍️