கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்,இ.கா.ப.,
அவர்கள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்
கோவை ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக காவல்துறையினருடன் ஒரு நாள் நிகழ்வு.
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோவைமாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில்
காவல்துறையினருடன் ஒரு நாள்"(A DAY WITH POLICE) என்ற நிகழ்ச்சி
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்,இ.கா.ப.,
அவர்கள்தலைமை தாங்கி
கோவில்பாளையம் அரசு பள்ளியில் பயிலும் 30 மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் முத்துசாமி, இ.கா.ப., அவர்கள்,
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,
இ.கா.ப.,அவர்கள் மற்றும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள அனைத்து வகையான துப்பாக்கிகளை பற்றியும் தெரிந்து கொண்டு அதனை கையாண்டனர்.
கோவை Rifle Club-ஐ பார்வையிட்டனர். அப்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் அவர்கள் மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் முறையை எடுத்து கூறியதுடன் அவர்கள் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சியையும் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவியர்களுக்கு இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்கள்.
மேலும் இதுபோன்ற
நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கோவை மாவட்ட
காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
🥦. கே தமிழகம் சேட் ✍️