துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வனக்கோட்டத்தில் 19.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயலில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் பராமரிப்பு முகாம், 2.60 கோடி ரூபாய் செலவில் வடிமைக்கப்பட்டுள்ள மின்னணு வனஆவணக் காப்பக இணையதள சேவை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கோவை வனக்கோட்டத்தில் 19.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயலில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் பராமரிப்பு முகாம், 2.60 கோடி ரூபாய் செலவில் வடிமைக்கப்பட்டுள்ள மின்னணு வனஆவணக் காப்பக இணையதள சேவை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் பல்லுயிர் பெருக்க பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்  செயல்படுத்தி வருகின்றார்.

தமிழ்நாடு பல்வகை பாலூட்டிகள், பறவைகள். ஊர்வன மற்றும் மீன்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்களை கொண்டுள்ளது. இந்நிலையில், அதிகரிக்கும் நகரமயமாக்கல், வாழிட இழப்பு, சாலை விபத்துகள், வேட்டை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக காயமடைந்த மற்றும் கூட்டத்திலிருந்து பிரிந்த வனவிலங்குகள் மற்றும் மனித-வனஉயிரின மோதல்களால் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளித்திட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 
கோவை வனக்கோட்டம். சிறுமுகை வனசரகம் பெத்திக்குட்டையில் 19.50 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒரு மாநில அளவிலான வனஉயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. 

இந்த மையத்தில் மீட்கப்பட்ட வனஉயிரினங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் அவற்றை பாதுகாக்கவும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு, 17 வனஉயிரின அமைவிடங்கள் மற்றும் முழுமையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நம்மாநிலத்தில் வனக் குற்றங்கள் மற்றும் வனஉயிரின கடத்தல்களை தடுத்திடவும், வனம் மற்றும் வனஉயிரின பாதுகாப்பை மேம்படுத்தவும். 

தமிழ்நாடு வனஉயிரின குற்றத் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

யானைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. யானை மேலாண்மையின் அதிகரிக்கும் தேவையை உணர்ந்து கோவை வனக்கோட்டம் . போளுவம்பட்டி வன சரகம் சாடிவயாலில் 8.00 கோடி ரூபாய் செலவில் யானைகள் பராமரிப்பு முகாம் அமைக்கப்பட்டது.
சுமார் 200 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வனத்துறையின் முக்கிய ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் போன்ற மதிப்புமிக்க தொகுப்புகளை, ஆராய்ச்சியாளர்கள், வனஅலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, "தமிழ்நாடு வனக் (Tamil Nadu Forest Archives Repository)" எனப் பெயரிடப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக 2.60 கோடி ரூபாய் செலவில் மின்ணனு ஆவணக் காப்பகமாக இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வன உயிரின வனக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்தி. தமிழ்நாட்டின் பல்லுயிர் பெருக்க பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் 
கோவை வனக்கோட்டம் பெத்திக்குட்டையில் 19.50 கோடி ரூபாய் செலவில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து,   சாடிவயலில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் பராமரிப்பு முகாம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் முக்கிய ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை ஆராய்ச்சியாளர்கள், வனத்துறையினர். கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் பார்வையிடும் வகையில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால் தமிழ்நாடு வனக் காப்பகப் பதிவுகளின் சேமிப்பு மையமாக 2.60 கோடி ரூபாய் செலவில் வடிமைக்கப்பட்டுள்ள
மின்னணு ஆவணக் காப்பக இணையதள சேவையினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வனம் மற்றும் வனஉயிரின பாதுகாப்பு பணிகளுக்காக .315 ஸ்போர்ட்டிங் ரைஃபிள்கள், 9mm ஆட்டோ பிஸ்டல்கள் உள்ளிட்ட படைக்கலன்களை துணை வன பாதுகாவலர். வனச் சரகர். வனவர் மற்றும் வனக் காப்பாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,

முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். 
செந்தில் பாலாஜி.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ,இ.ஆ.ப.,

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் .ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி.இ.வ.ப.,

தலைமை வன உயிரின காப்பாளர். ராஜேஷ்குமார் டோக்கரா. IFS.

தமிழ்நாடு வன உயர்பயிற்சியகம் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் இயக்குனர். சேவா சிங்.

கூடுதல் தலைமை வன பாதுகாவலர் மற்றும் சென்ட்ரல் அகாடமி பார் ஸ்டேட் பாரஸ்ட் சர்வீஸ், கல்லூரி முதல்வர். V.திருநாவுக்கரசு.IFS.

கூடுதல் தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம்.

 ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வனப்பாதுகாவலர். டி.வெங்கடேஷ்.  IFS

தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம். துணை வனபாதுகாவலர். மற்றும் துணை இயக்குனர். வித்தியா..

கோவை வன கோட்டம் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்.

கோவை பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் கணபதி ப.ராஜ்குமார், .க.ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர்  வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் வாரியத் தலைவர்  திப்பம்பட்டி ஆறுசாமி, 

 மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் திருமதி கா.ரங்கநாயகி ராமச்சந்திரன்,
வனசாராக அலுவலர்கள் வனப் பணியாளர்கள்..
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

🌳 கே தமிழகம் சேட்  ✍️