A DIVINE CELEBRATION AT KATCHATHEEVU
ST. ANTHONY'S FEAST - 2025
இலங்கை அருகே கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது ஒரு சிறப்பு பார்வை.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும். இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18. கடல் மைல் தொலைவிலும் சுமார் 285. ஏக்கர் ( 1- 15. சதுர கிலோமீட்டர் ஆகும் ) ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சதீவில் தற்போது .
மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை.
இந்த தீவை விசை. மற்றும் நாட்டு படகுமூலம் கடல் மார்க்கமாக சுமார் 3 மணி நேரம் பயணித்தால் கச்சத்தீவு அடையலாம்
இந்த கச்சத்தீவு கடந்த 17-ஆம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது.
1622-ஆம் ஆண்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னரால் வெளியிடப்பட்ட
செப்பு பட்டயத்தில், கச்சத்தீவையும் தாண்டி, இலங்கையின் தலைமன்னார் கடல் பரப்பு வரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது,
இந்த கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் கீழ் வந்தது. இதன் பின், 1921-ஆம் ஆண்டில், இந்தியாவும், இலங்கையும் இந்த இடத்தை மீன்பிடிக்க உரிமை கோரின.
இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு, 1974-ஆம் ஆண்டில், அப்போதைய. இந்திய அரசு. இலங்கை அரசு. கடல் சார்ந்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பிறகு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்குப்பின் கச்சத்தீவு விழாவுக்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர்.
இந்தியா-இலங்கை கடல்.ஒப்பந்தத்தின் போது, சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்துவார்கள்.
இந்த தீவில் கட்டப்பட்டுள்ள.
புனித அந்தோனியார். தேவாலயத்தை, திருவிழாவின் போது இந்தியர்கள் விசா. இல்லாமல் பார்க்க அனுமதிக்கப்படுவர். எனினும், இந்தத் தீவில் இருந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது.
என குறிப்பிட்டிருந்தன.
ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டி அருகே உள்ள புதுப்பட்டணம் என்ற சேர்ந்த சீனிக்குப்பன் படையாட்சி ஆகியோரால் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.
இதன் பிறகு இலங்கை அரசு கட்டடங்களை கட்டியது.
கடலில் இயற்கை சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், அதிக அளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்திய பிறகே கடலுக்குச் செல்வது வழக்கமாக இருந்து வந்தனர்
இந்திய – இலங்கை மக்கள் சங்கமிக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில்
இலங்கை பகுதியில் இருந்து சுமார் 4800 க்கும் மேற்பட்டவர்கள்
கச்சத்தீவு மார்ச் 14- 15. இரு தினங்கள்புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கவும்
இந்திய பக்தர்கள் தரப்பில் 3,414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 617 பேர் பயணத்தில் பங்கேற்கவில்லை. மொத்தம் 3,143 பக்தர்கள் மார்ச் 14. தேதி காலை 6.30 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்தனர்.
வருவாய்த்துறை, புலனாய்வுத்துறை, குடியேற்றப்பிரிவு, சுங்கத்துறை, கியூ பிரிவு போலீசாரின். சோதனைக்கு பின், . குழுவினர் கச்சத்தீவு செல்லுபவர்கள் வைத்திருந்த. ஆதார் கார்டு.
அடையாள அட்டை. உடைமைகளும். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்களுக்கு எந்தவித வழக்கு பதிவு செய்யவில்லை என்ற அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில். வழங்கும் நற்சான்றிதழ். சோதனை செய்த பின்னர்
வரிசை எண் அடிப்படையில் ஒவ்வொரு படக்காக 78 விசைப்படகுகளில் 2,867 பக்தர்கள், 21 நாட்டுப்படகுகளில் 276 பக்தர்கள். கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்ல இருந்த நிலையில்
ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ். சுங்கத்துறை துணை ஆணையர் பிரகாஷ். வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன். வட்டாட்சியர் அப்துல் ஜபார்.
நகராட்சி ஆணையாளர் கண்ணன். உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தன.
இலங்கையில் இருந்து சுமார் 4,800 பக்தர்கள் என மொத்தம் இருநாடுகளை சேர்ந்த 8,200 பக்தர்கள் பங்கேற்றனர்.
படகுகள் புறப்பட தொடங்கியதும் அதில் இருந்தவர்கள் உற்சாகமாக கைகளை அசைத்து மகிழ்ச்சி
தெரிவித்தனர்
கச்சத்தீவுக்கு படகுகளில் செல்பவர்கள் இறங்கி நடந்து செல்ல வசதியாக இலங்கை கடற்படையால் அமைக்கப்பட்ட தற்காலிக மிதவை பாலம். அமைக்கப்பட்டு இருந்தனர். செல்லும்போது வரும் போதும். சோதனைக்குப் பிறகு பக்தர்களை அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்த்
தலைமையேற்று மார்ச்14-மாலை 4.30 மணிக்கு புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். இதில்
ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ. யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். முதன்மை குரு அருட்தந்தை. ஜோசப் தாஸ் ஜெயபரத்தினம்.
பின்னர் சிறப்பு ஆகியோர் கலந்து கொண்டனர் வின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில், இருநாட்டு பக்தர்களும், சிலுவையை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து வழிபட்டனர்.
சிறப்பு ஆதார் அணைக்குப் பிறகு கிறிஸ்துவ பக்தர்களுக்கு நன்மை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இரவு தேர் பவனி நடைபெற்றது
இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை. பத்திநாதன். யாழ்ப்பாணம் மாவட்ட குரு முதல்வர் ஜெபரத்னம். உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர்
இரு நாட்டு பக்தர்களும். கடலில் இயற்கை சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், அதிக அளவு மீன். கிடைக்கவும்
வேலைவாய்ப்பு
தொழில். வியாபாரம் . திருமண தடை நீங்க. நோய் நொடிகள். இல்லாமல் வாழவும். மற்றும் உற்றார் உறவினர்களுக்கு ஆகவும். வேண்டி பிரார்த்தனை செய்தனர்..
15.3.25. அன்று காலை சிறப்பு திருப்பலியும். கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்று. இதில் இருநாட்டு பத்திரங்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கொடியிறக்கத்துடன். கூட்டுத்திதிருப்பயை தொடர்ந்து. கொடி இறக்கப்பட்டு திருவிழா விழா நிறைவு பெற்றது.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா என்பதால் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர் மேலும் இரவு நேரங்களில் இருநாட்டு பக்தர்களும் தங்களது மகிழ்ச்சி மற்றும் பரஸ்பரம். உணவு வகைகளை. பகிர்ந்து கொண்டனர். இதனால் அங்கு ஒரு வித நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.
அதை தொடர்ந்து இருநாட்டு பக்தர்களும் கச்சதீவில் இருந்து இலங்கை கடல் படையினர் சோதனைக்கு பிறகு விசை படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் பயணம் செய்து. பக்தர்களை நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படையினர் சோதனை நடத்தினர். தாயகம் திரும்பினர்.
கச்சத்தீவு. நாட்டுப் படகு பயணம். எங்கும் கிடைக்காத அற்புதமான உணவு ருசியுடன் சாப்பிட்டு கடல் அலைகள் எழுப்பும். நம் காதில் தேன் இசையும் கேட்டு.
புனித அந்தோனியார் ஆலயத்தில்.. இயற்கையின் அரவணைப்பில் உள்ள மரம். செடி. கொடிகளுக்கு இடையில் அமர்ந்து. உரையாடி. உறங்கியும்.
உலக மனிதர்கள். நலனுக்காகவும். ஒற்றுமைக்காகவும். கடல் மற்றும். வன உயிரினங்கள் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டு அருகே கடற்கரை ஓரத்தில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போது. நம் கால்களை கடல் அலை தொட்டு விளையாடும். பிரமாதம் போங்க....
அதிகாலை கடற்கரையில் நீராடி விட்டு சூரியன் உதயமாவதை காணும் போது. எங்கும் கிடைக்காத மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமாக இருக்கிறது கச்சத்தீவு. புனித அந்தோணியார் ஆலய திருவிழா. பயணம்...
🌳 கே தமிழகம் சேட் ✍️