காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை
மாண்புமிகு அமைச்சர்
மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு..
விரிவாக்க கட்டுமான பணிகள் நான்கு மாதங்களாக முடங்கியுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து கடிந்து கொண்ட அமைச்சர்....!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மாலை சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் அவர்கள் வழியில் இருந்த காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. முன்தகவல் ஏதுமின்றி திடீரென உள்ளே வந்த அமைச்சர் ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வார்டு களுக்கும் நேரடியாக சென்ற மருத்துவர்கள் பணியில் உள்ளனரா, நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப் படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சித்தமருத்துவப் பிரிவில் மருத்துவர் பணியில் இல்லாமல் இருந்தது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பினார்..
அவர் விடுப்பில் இருப்பதாக தலைமை மருத்துவர் சுதாகர். தெரிவித்த போது அதற்கான ஆவணத்தை கேட்டார்..
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் வட்டார அளவிலான ஆய்வாக கட்டிடத்தையும், செவிலியர் தங்கும் விடுதி கட்டுமானங்களை ஆய்வு செய்த போது பணிகள் துவங்கி நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை கட்டுமான பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக அழைத்த அமைச்சர், முறையாக பணிகள் மேற்கொள்ளாத நபருக்கு ஏன் இரண்டு கட்டுமான ஒப்பந்தங்களை
ஏன் வழங்கி கீர்கள் கடைசியாக எப்போது இங்கு வந்து நேரில் பணிகளை ஆய்வு செய்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்தார்..
இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி பணியில் சுணக்கம் காட்டும் பழைய ஒப்பந்ததாரரை விடுவித்து விட்டு புதிய நபர்களிடம் பணியினை வழங்கி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்..
அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தின் விரிவாக்க பணிகள் விரைவு படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது
🌳 கே தமிழகம் சேட் ✍️