யாரிடமும் ஏமாறவேண்டாம் சைபர்கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர் அறிவுரை..!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த மெகுல்ஷா என்பவர் கடந்த ஆண்டு டெலிகிராம் செயலி மூலம், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் மர்ம நபர்களிடம் ரூ.92 லட்சத்து 77 ஆயிரத்து 839 பணத்தை இழந்து உள்ளார். இதேபோல் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்டு பணம் இழந்த பலரும் இதுகுறித்து ஊட்டியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்
இதனைத் தொடர்ந்து
ஆன்லைன் மோசடியில் பலர் இழந்த ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவ்வாறு மீட்கப்பட்ட பணத்தை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி
ஊட்டி சிறுவர் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் அவர்கள் தலைமை தாங்கி, புகார்தாரர்களின்
வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.
இதேபோல் நீலகிரி முழுவதும் செல்போன் காணாமல் போனது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் மீட்கப்பட்டது.
அந்த செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர் அவர்கள் கூறியதாவது
நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் பண மோசடி, கடன் வழங்குவதாக மோசடி, ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.60 லட்சம் மதிப்பிலான 180 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த நபர்களுக்கு ரூ.1.21 கோடி பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகள், சமூக வலைதளங்கள் மூலமாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரிடமும் ஏமாறவேண்டாம் சைபர்கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர் அவர்கள் கூறினார்.
அப்போது சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் யசோதா, ஜெகதீஸ், கண்ணன், பிரவீன், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️