கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரி நாராயணன்.IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரி நாராயணன்.IPS அவர்கள்  தலைமையில் நடைபெற்றது


மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை  (Re-enquiry) இன்று  (12.07.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், I.P.S.,அவர்கள் தலைமையில்
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.



மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 

81 மனுக்கள்மீது 

விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 

2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,3 மனு மீது மனு ரசீது (CSR) பதிவு செய்யப்படும், 76 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 


💥திருப்பத்தூர் காவல் நிலையங்களில் முறையான தீர்வு   பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்.,IAS அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

 

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்.,IAS அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (12.07.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. 

முகாமில் கருத்து கேட்டுப்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 12 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காரணம்
திரு.ஆல்பர்ட் ஜான்.,IAS கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

புதிதாக 33 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார்கள்

இக்கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் பங்கேற்றனர்.