மாண்புமிகு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கடற்கரை கழிமுகப்பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழல் காத்திடும் அலையாத்தி காடுகள் உருவாக்கிட மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
💠 சென்னை செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே,
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மாண்புமிகு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கடற்கரை கழிமுகப்பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழல் காத்திடும் அலையாத்தி காடுகள் உருவாக்கிட மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சிறப்புச் செயலாளர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சந்திர பிரகாஷ் கோயல், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்/தலைமை வன உயிரின காப்பாளர் திரு.ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, சென்னை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் கௌ.கீதாஞ்சலி, அரசு அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
💠 சென்னை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (14.07.2023) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
உடன் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீலா நந்தன், இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) திரு. சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் திருமதி எம். ஜெயந்தி, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.