💠 பவானிசாகர் வன
சரகத்தில் புள்ளிமான் களுக்கு சுருக்கு கம்பி வைத்து வேட்டையாடிய இருவர் கைது..!
💠 டி என் பாளையம் பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது சிறுத்தை புலியை கண்காணிக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு...!
💠 சத்தியமங்கலம் புலிகளை காப்பகத்தில். உள்ள சத்தியமங்கலம்.பவானிசாகர். விளா முண்டி .டி என் பாளையம். கடம்பூர். கேர்மளம். தலமலை. தாளவாடி. ஆசனூர்..சீரஹள்ளி.. வன சரகங்களில் சிறுத்தை. புலி. யானை. காட்டு மாடு. மான். மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன
இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்.
ஈரோடு மாவட்ட வன அலுவலர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின்படி
வன உயிரினங்கள் பாதுகாப்பு நலன் கருதி வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும்.
வனத்துறையினர் சிறப்பு ரோந்து பணி அந்தந்த வன சரக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொண்டு வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து
பவானிசாகர் வனச்சரக அலுவலர் திரு.செ.சிவக்குமார் மேற்பார்வையில் வணப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது
கொத்தமங்கலம் பிட் கீழ்பவானி ஆற்றின் இடது கரையில், வரப்பள்ளம் பகுதியில் அதிகாலை காலை ரோந்து பணியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டிருந்த போது, கீழ்பவானி ஆற்றின் இடது கரையில் வரப்பள்ளப்பகுதியில் புதர்கள் நிறைந்த இடத்தில் இரண்டு நபர்கள் புள்ளிமான்களுக்கு சுருக்கு கம்பிகள் கட்டி புள்ளிமானை வேட்டையாடி, இறைச்சியை விற்பணை செய்யும் நோக்கில் பவானிசாகர் குடில் நகர் சேர்ந்த ஓதிச்சாமி.தினேஷ்குமாஎன்பவர்கள் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எதிரிகளை கைது செய்யப்பட்டது. பிடிபட்ட எதிரிகளிடமிருந்து புள்ளிமான் கறி, புள்ளிமான் தலைகள், புள்ளிமான் கால்கள், சுருக்கு கம்பிகள், இரும்பு கைபிடியுடன் கூடிய வெட்டு அரிவாள், இரும்பு கைபிடியுடன் கூடிய சூரிகத்தி, வெள்ளை நிற சாக்குபைகள் ஆகியவைகள் கைப்பற்றப்பட்டு பவானிசாகர் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்த பின்னர் எதிரிகளையும், பிடிபொருட்களையும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டது. நீதிமன்ற நடுவரின் உத்திரவுபடி எதிரிகளை கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டது...!
💠 பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
💠 டி. என். பாளையம் வனசரகம்
புஞ்சைதுறையாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). இவர் 6 ஆடுகள், 3 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கமாக இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை வீட்டு வாசலில் கட்டி வைத்திருப்பார். அதன்படி நேற்று முன்தினம் இரவும் கட்டி வைத்திருந்தார்.
இந்தநிலையில்
காலை பாலகிருஷ்ணன் எழுந்து வந்து பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்லை. இதனால் அவர் அந்த பகுதியில் தேடிப்பார்த்தார். அப்போது புஞ்சைதுறையாம்பாளையம் வனப்பகுதிக்கு செல்லும் வழியில் 2 ஆடுகளும் உடலின் பெரும்பகுதி கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்தன.
குதறிக்கிடந்த ஆடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இதுகுறித்து
உடனே டி.என்.பாளையம். வனசரக அலுவலர் மாரியப்பன் இடம் தகவல் தெரிவித்தனர்
இதனைத் தொடர்ந்து
சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்.
ஈரோடு மாவட்ட வன அலுவலர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின்படி
அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் ஆடுகள் கட்டப்பட்டு இருந்து இடத்தில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் வனத்துறையினர், ஆடுகளை கவ்வி இழுத்து சென்றது சிறுத்தைப்புலி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்
சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் 10. இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் .
அதன்மூலம் நடமாட்டம் தெரிந்த உடன் சிறுத்தைப்புலி கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
புஞ்சைதுறையாம்பாளையம் பகுதியில் தொடர்ந்து சிறுத்தைப்புலி ஆடுகளை வேட்டையாடி வருவதால் அப்பகுதியில் ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் புஞ்சைதுறையாம்பாளையம் ஊராட்சி சார்பில், 'சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாடவேண்டாம்' என்று வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️