திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்த யானைகளை விவசாயிகள் பயிர்கள் சேதப்படுத்தியது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர் பாண்டியன் IAS. அவர்கள் கேட்டறிந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் செல்ல அதன் வழியில் விடுங்கள் என அறிவுறுத்தினார்...!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்த யானைகளை விவசாயிகள் பயிர்கள் சேதப்படுத்தியது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்  
தெ. பாஸ்கர் பாண்டியன்  IAS. அவர்கள் கேட்டறிந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் செல்ல அதன் வழியில்  விடுங்கள் என அறிவுறுத்தினார்...!
💠 திருப்பத்தூர் நாட்றம்பள்ளி வட்டம் ஆத்தூர் குப்பம் கிராமத்தில் உள்ள மகேஸ்வரன் என்பவற்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் 2 காட்டு யானைகள் உள்ளதை  வனத்துறை தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்லாதவாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.IAS அவர்கள்  அப்பகுதிக்கு சென்று விவசாய பொது மக்களிடம் யானை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது டார்ச் அடிக்கக் கூடாது கூச்சல் இடக்கூடாது அது வழியில் நெடுஞ்சாலை வழியாக செல்லட்டும் என அருவருத்தினால் மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்து மற்றும் கோரிக்கைகளை பெற்ற  பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் உடன் வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஒலிபெருக்கி வைத்து ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு எச்சரித்தும் மற்றும் 

ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானைகள் நடமாடும் பகுதியினை வனத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு  வருகின்றனர்.

 இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கி.பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, வட்டாட்சியர் திரு.குமார்,  வருவாய் ஆய்வாளர், காவல் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் உள்ளனர்.

யானை தற்போது திரியாலம் ஏரி பகுதியில் உள்ளது என தகவல்


💠 நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா திருப்பத்தூர் மாவட்டம்  குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
தெ பாஸ்கர் பாண்டியன் IAS. அவர்கள் துவக்கி வைத்து ஓடினார்கள் 


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில்  நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா திருப்பத்தூர் மாவட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.IAS
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன்ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து ஓடினார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திரு.வில்சன் இராசசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.இலட்சுமி, செல்வி.பிரேமலதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன், அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் மற்றும் பலர் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து

நெகிழி பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்த்து, மஞ்சப்பை பயன்பாட்டை குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் IAS., அவர்கள் ஆற்றிய விழிப்புணர்வு உரை..!


நாம் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என் என்றால் ஒரு காலத்தில் இந்த உலகம் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்திருக்கும் தற்பொழுது எங்கு பார்த்தாலும் நெகிழி குப்பைகளாக காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தை உயரவில்லை. மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் போகின்றது. நிலத்தடி நீர்மட்டம் உயராமல் போனால் தாவரங்கள் மாண்டு போகும், நமக்கு தேவையான நீர் கிடைக்காது, இது மட்டுமல்லாமல் தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்கள் ஆறுகள் மூலமாக கடலில் அடித்து செல்கிறது குளங்கள் ஏரிகளில் சென்று சேர்கிறது. ஆற்றுக்குள் செல்கின்ற பொழுது 0.5 mm குறைவான அளவிற்கு அந்த பிளாஸ்டிக் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் எந்த காலகட்டத்திலும் மக்காது, இதற்குப் பெயர் மைக்ரோ பிளாஸ்டிக். இந்த மைக்ரோ பிளாஸ்டிக் உப்பிள் மூலமாக திரும்பவும் நமது உடம்பிற்கு வந்து சேர்கின்றது. நெகிழிகளை எரிக்கின்ற பொழுது டைஆக்சின் என்ற வாயு வெளிப்படுகிறது, அந்த டைஆக்சனை நாம் சுவாசிக்கும் பொழுது நமது உடம்பில் கொழுப்பை சேமித்து வைக்கின்ற, அடிபோஸ் திசுக்களின் இடையே சேமிக்கப்படுகிறது. மனிதர்கள் உடம்பில் மட்டுமல்ல வாழ்கின்ற அனைத்து உயிரினங்களிலும் இந்த வாய்வானது சேமிக்கப்படுகின்றது. நாம் சுவாசித்த டைஆக்சின் வாயுவானது நமது உடம்பிலிருந்து வெளியேற 11 ஆண்டுகள் ஆகும்.

மேலும் நாம் குப்பைகளை கேரி பேக்கில் மூட்டை கட்டி போட்டு விடுகின்றோம். மக்கும் பொருட்கள் மக்கா பொருட்கள் ஒன்றாக சேர்ந்து விலங்கினங்கள் பறவை இனங்களும் சேர்த்து உண்ணுகின்றது. நிறைய விலங்கினங்கள் பிளாஸ்டிக் எது உணவு எது என்று தெரியாமல் உண்ணுகின்றன. இந்த நெகிழிகளின் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன நிலத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன பறவை இனங்கள் பாதிக்கப்படுகின்றன. பறவை இனங்கள் இல்லை என்றால் காடுகள் இல்லை பறவைகள், விலங்கினங்கள் சேர்ந்துதான் காடுகளை உருவாக்குகின்றது. பல உயிரினங்கள் இறந்த பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்கின்ற பொழுது வயிற்றுக்குள் இருந்து நெகிழிப்பைகளை கிலோ கணக்கில் எடுக்கப்படுகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மஞ்சப்பையை திட்டத்தினை தொடங்கி அனைவரும் கதர் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். அனைவரும் அதிக அளவில் மரங்களை நட வேண்டும். இதன் மூலம் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக கிடைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். உலகில் வெப்பநிலை அதிகமாகி கொண்டிருக்கின்றது இதன் மூலம் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும் உருக ஆரம்பித்தால் கடல் மட்டம் உயரும் இதன் மூலம் பெரும்பாலான தீவுகள் மூழ்கி போகும் அபாயம் ஏற்படும். மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மக்குவதற்கு 1000 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். நமது பிள்ளைகளுக்கு நெகிழியுடைய தீமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். நாம் வாழ்கின்ற பகுதியில் நெகிழிகளை அறவே தவிர்க்க வேண்டும் என திருப்பத்தூர்மாவட்ட ஆட்சித்தலைவர்தெ. பாஸ்கர் பாண்டியன்.IAS. அவர்கள் தெரிவித்தார்கள்.



💠 கோவை வனக்கோட்டத்தில் மேட்டுப்பாளையம் வன சரகம்
 கல்லார் பழப்பண்ணையில்
ஸ்பேத்தோடியா மரத்தின் பொந்தில் இருவாச்சி பறவை கூடுகட்டி குஞ்சு பொரித்து இருந்து வந்தது. 
இருவாச்சி பறவையின் குஞ்சை   வன பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டு வந்தனர். 

தொடர்ச்சியாக குஞ்சுக்கு தாய் பறவைகள் உணவழித்து கொண்ட நிலையில், 
தற்போது கடந்த ஒரு நாளாக பொந்தில் இருக்கும் இருவாச்சி குஞ்சின் அசைவுகள் எதுவும் தென்படாத காரணத்தினால் நேற்று  வன பணியாளர்கள் மர பொந்துக்குள் ஏணி மூலம் ஏறி பார்த்ததில் இருவாச்சி பறவையின் குஞ்சு இறந்த நிலையில் இருந்ததது கண்டறியப்பட்டது. பின் இருவாச்சி பறவையின் குஞ்சானது இறந்த நிலையில் மீட்கப்பட்டு

 தன்னார்வலர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் வன கால்நடை மருத்துவரால் உடர்கூராய்வு செய்யப்பட்டது.

🌳 கே தமிழகம் சேட் ✍️