தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..!
கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர்மதிவேந்தன் அவர்கள் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக கோவை வந்த அமைச்சர் முதலில் வடகோவை பகுதியில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை பார்வையிட்டார்.
அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர்
முன்னதாக தமிழ்நாடு வன உயர் பயிற்சிகரத்தில் உள்ள வன தியாகிகள் நினைவு சின்னத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
பின்னர். இப்பயிற்சியகத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் கூறியதாவது:
இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை வால்பாறை ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உள்ளது. குறிப்பாக வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ, யானைகள் இறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
வால்பாறை பகுதியில் சில எஸ்டேட்டுகளில் சிறுத்தைகள், புலிகள் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானை முகாம்கள் முதலை பண்ணைகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
யானைகள் முகாமுக்கு தேவையான நிதிகளை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
கோடை காலத்தில் வனப்பகுதியில் காட்டுதீ பரவுகிறது மதுக்கரை வனப்பகுதியில் தீ ஏற்பட்டதை வனத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
வருடத்திற்கு 80க்கும் மேற்பட்ட யானைகள் இயற்கையாகவே இருக்கிறது. இது தவிர்த்து மின்சாரம் தாக்கியோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறந்தால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
யானைகள் இறப்பு என்பது இயற்கையானதை தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்கள் ஏற்பட்டால் உதாரணமாக ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்தால் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். தற்போது மதுக்கரை பகுதியில் கூட 7 கோடி மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அந்த தகவலை வனத்துறையினருக்கு அளிக்கிறது.
இதனால் வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டவோ அல்லது ரயிலை நிறுத்தவோ முயற்சிகளை மேற்கொள்வர். Elephant corridor (தாழ்வாரம்) என்பது உயர்நீதிமன்றத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அது எது என்பது இன்னும் குறிப்பிடும் வகையில் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே முறையாக அதனை நிர்ணயிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
வனப்பகுதிக்கு பாதிப்பு வராதது போல் மின்சார வாகனம் உட்பட பல்வேறு விஷயங்களை தொடர்ந்து கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட காலங்களில் யானைகள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு பிற யானைகளை தாக்கிக் கொள்ளும் அப்படிப்பட்ட நேரங்களில் யானைகளை பிடிப்பது கடினம் அளவுக்கு அதிகமாக மயக்க ஊசியும் கொடுத்து விடக்கூடாது அது யானைக்கே பாதிப்பாக முடிந்து விடும்.
எனவே வனத்துறை தகுந்த ஏற்பாடுகளுடன் அதனை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. வனப்பகுதிகளில் தனியார் நிர்வாகத்தினரால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு வராத வகையில் வனத்துறையின் சார்பில் சிறப்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் வருகின்ற 10 ஆண்டுகளில் . வனங்களின் பரப்பு 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறனது என
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாடிவையில் யானைகள் முகாம் கோவை குற்றாலம் ஆகிய இடங்களில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில்
தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் .
சுப்ரத் மொக பத்ரா.IFS.
தமிழ்நாடு வன உயிர் பயிற்சியாகத்தின் கூடுதல் முதன்மை வன பாதுகாவலர். இயக்குனர் சேவாசிங்.IFS.
ஆனைமலை புலிகள் காப்பகம் (கோவை)
வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம்.IFS.
கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்.IFS.
மாவட்ட வருவாய் அலுவலர்.
லீலா அலெக்ஸ். உட்பட வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️