நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நாளை முதல் நியாய விலை கடையின் மூலம் 2. கிலோ கேழ்வரகு இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் உருளைக்கிழங்கு தொழிலாளரிடம் குறைகளை கேட்டு அறிந்தார்
என கூடுதல் தலைமைச்செயலர் ராதாகிருஷ்ணன் IAS
தகவல் தெரிவித்தார்..!
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை செல்லும் சாலையில்
நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்குகள் லாரியில் மொத்தமாக கொண்டு வரப்பட்டு
பின்னர் உருளைக்கிழங்கை. ராசி. தலை. துடு.மீடியம். பொடி. வெட்டு பச்சை என உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கப்பட்டு
ஏல முறையில். விற்பனை செய்யப்பட்டு
தமிழ்நாடு கேரளா பல்வேறு பகுதியைச் சேர்ந்த மொத்த விற்பனையாளர்கள் வாங்கிச்செல்கின்றனர்.
இந்த நிலையில்
தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாள ரும்,கூட்டுறவுத்துறை(உணவு மற்றும் பாதுகாப்பு) செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS
மேட்டுப்பாளையம் மைதானம் பகுதியில் செயல்பட்டு வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்
ஊழியர்களிடம் உருளைக்கிழங்கினை தரம் பிரிப்பது,
விலை நிர்ணயம் செய்யப்படுவது
என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் தொழிலாளி இடம் குறைகளை கேட்டறிந்து
பின்னர் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த
கூட்டுறவு துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் I.A.S அவர்கள்
தமிழ்நாட்டில் மொத்தமாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இதில் 1.7 கோடி மக்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் நீலகிரி கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணியாற்றுவதற்கான மேம்பாட்டு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடந்த ஆண்டு 13,472 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,
நடப்பாண்டில் 14,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும்,தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை பொது விநியோக திட்டத்தின் மூலமாக 35.95 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக வும்,இதற்காக 4.43 லட்சம் விவசாயிகளுக்கு 7,340 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தற்போது பொதுமக்கள் சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகிறார்கள்.
அதனால் தான் தமிழக வேளாண்மைத்துறை சார்பில் சிறு தானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்
பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும்,
விவசாயிகள் பயிரிடும் கேழ்வரகினை கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நியாய விலை கடை மூலமாக வழங்க உள்ளதாக கூறினர்.
முதல் கட்டமாக
நீலகிரி,தர்மபுரி மாவட்டங்களில் செயல் பட்டு வரும் ரேஷன் கடைகளில் அரிசியுடன் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும்,இந்த திட்டத்தினை கூட்டுறவு, உணவு,சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர் எனவும்,படிப்படியாக இத்திட்டம் மாநில முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும்,மக்கள் தொகைக்கு ஏற்ப பகுதி நேர நியாய விலை கடைகள் முழுநேர நியாய விலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின் போது நீலகிரி மாவட்டத்தின் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன்,
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன்,
டியூகாஸ் மேலாண்மை இயக்குனர் சிவகுமார்,கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வன்,
கோவை கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை முத்துக்குமார்,
நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் செயலாளர் தியாகு உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️