நீலகிரி வனபணியாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளித்து வன உயிரினங்கள் பாதுகாக்கும் முறைகள் வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகள் குறித்து மாவட்ட வன அலுவலர் S.கௌதம் I.F.S. அவர்கள் அறிவுரை வழங்கினார்
நீலகிரி வன கோட்ட வன பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி ஊட்டி அவலாஞ்சி சாலையில் உள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில்
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்
டி. வெங்கடேஷ் I.F.S. அவர்கள்
அறிவுறுத்தலின் பேரில்
நீலகிரி மாவட்ட ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர்
S. கௌதம் I.F.S.
தலைமையிடம் உதவி வன பாதுகாவலர் P.தேவராஜ் I.FS
ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது
நீலகிரி வனக்கோட்ட வன பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டது இப்ப பயிற்சியில் நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட வனசரக அலுவலர்கள். வனவர்கள். வனக்காப்பாளர்கள். வன காவலர்கள். வேட்டை தடுப்புக்காளர்கள். மற்றும் தீ தடுப்பு காவலர்கள். அதி இரவு படை பணியாளர்கள்( RRT) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வன அலுவலர் S.கௌதம் I.F.S. அவர்கள்
பயிற்சியாளர்களுக்கு குற்றங்கள் கண்டறிதல். வகைப்படுத்துதல். அதனை கையாளுதல். படிவங்ள் பூர்த்தி செய்தல். மற்றும் அதற்கான சட்டங்கள் குறித்து விவரங்கள் . வனப்பணியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்
மேலும் வன குற்றங்கள். வன உயிரின குற்றங்கள். மற்றும் இதர குற்றங்கள் தொடர்பான வன பணியாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தை மாவட்ட வன அலுவலர்
S. கௌதம் I.F.S. அவர்கள் கூறினார்
பின்னர், Tamilnadu Forest Elite Force, வனஉயர் பயிற்சியகம் மூலம் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு தீ தடுப்பு முறைகள், தீ தடுப்பு கருவிகளை கையாளுதல், தீ நிகழ்வுகளின் போது எவ்வாறு செயல்படுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் ரமேஷ்.
குந்தாவனசரக அலுவலர் சீனிவாசன்.
பைக்காரா வனசரக அலுவலர் சரவணன்
பார்சன்ஸ் வேலி வனசரக அலுவலர் ரூன்யா.
தனிப்பிரிவு மற்றும் கவர்னர் சோலை வனசரக அலுவலர் பொறுப்பு. ராஜகுரு.
வன பாதுகாப்பு தனிப்பிரிவு வனசரக அலுவலர் பிரகாஷ்..
கோரகுந்தா வனசரக அலுவலர். மாரியப்பன்.
கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி வனசரக அலுவலர் ராம் பிரகாஷ்
குன்னூர் வனசரக அலுவலர் சசிகுமார்.
கட்டப்பட்டு வனசரக அலுவலர் செல்வகுமார்
மற்றும் வனவர்கள் வனக்காப்பாளர்கள். வனகாவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள்.ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி முடிவில்
ஊட்டி தெற்கு வனசாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி. நன்றி கூறினார்
🌳 கே தமிழகம் சேட் ✍️