மயில் உயிரை காப்பாற்றிய மேட்டுப்பாளையம் வனவர் முனியாண்டி....!!
முதுமலை புலிகள் காப்பக கோட்டம் வயது முதிர்வுன் காரணமாக இரண்டு பெண் யானைகள் இறப்பு--!!
💠 முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடிவன கோட்டம் , தெங்குமரஹடா வன சரகத்துக்கு உட்பட்ட கல்லாம்பாளையம் வனபகுதியில் வனசரக அலுவலர் மணி வெங்கடேஷ் மேற்பார்வையில்
வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது
பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில்
முதுமலை புலிகள் காப்பக மசனகுடி கோட்ட துணை இயக்குனர் அருண்குமார் மேற்பார்வையில்
முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குழுவினர்
இறந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்
உடற்கூறாய்வின் முடிவில் இறந்த யானையின் வயது சுமார் 50 என்றும் யானை வயது முதிர்வின் காரணமாக இறந்திருப்பது தெரியவருகிறது வனத்துறையினர் தெரிவித்தனர்
💠 மசினகுடி வனகோட்டம் ,மசினகுடி வனசரக அலுவலர் பாலாஜி மேற்பார்வையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது
அவரல்லா பிரிவுக்குட்பட்ட மாவனல்லா காவல் பகுதியில் பெண் யானை இறந்ததை கண்டறியப்பட்டது
இதனைத் தொடர்ந்து இயக்குனர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில்
துணை இயக்குனர் அருண்குமார் மேற்பார்வையில்
மசினகுடி, விலங்குகள் மற்றும் இயற்கைக்கான இந்தியா திட்டம். நிர்வாகி நைஜில்.
பொக்காபுரம் ஊர் தலைவர் மாரி. ஆகியோர்கள் முன்னலையில்
வனகால்நடை மருத்துவர் ராஜேஷ்
இறந்த பெண் யானையின் உடற்கூறாய்வு மேற்கொண்ட பின்னர்
சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் யாணை வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது என உடற்கூறாய்வு மூலம் தெரியவருகிறது என்றார்
💠 மேட்டுப்பாளையம் வன சரகம் கல்லார் துரிப்பாலம் அருகில் மயில் ஒன்று உயிருக்கு போராடுவதாக கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில்
மேட்டுப்பாளையம் வனசரக வனவர் முனியாண்டி மேற்பார்வையில்
தூரி பாலம்அருகே நீர் ஓடையில் வேலியில் சிக்கித் தவித்த மயில் ஒன்று பறக்க முடியாமல் படுத்து இருந்ததை கண்டறிந்து மயில் மீட்டு வனவர் முனியாண்டி தலைமையில் மயிலை
மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று கால்நடை மருத்துவர் முதல் உதவி அளிக்கப்பட்டு, மயிலானது அரசு மர கிடங்கு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
💠 சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் வனவர் கோபிநாத் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்தபோது
சிறுமுகை சாலையில் அருகே தனியார் பள்ளி பின்புறம் ஒரு தோட்டத்தில் துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்று பார்த்த போது மான் ஒன்று இறந்து கிடப்பதை கண்டறிந்தன.
இதனை அடுத்து கோவை மாவட்டவன அலுவலர் ஜெயராஜ் அறிவுறுத்தலின் பேரில்
வனபணியாளர்கள் முன்னிலையில். சிறுமுகை அரசு கால்நடை மருத்துவர் தியாகராஜன்.
மருத்துவக் குழு இறந்த மான் உடற் கூறாய்வு செய்தனர்
மான் இறப்பு சம்பந்தமாக இரண்டு நாட்களில் அறிக்கை வருவதாக சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தார்
🌳 கே.தமிழகம்சேட் ✍️