கோவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன்.IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..!!
கோவை மாவட்ட காவல் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பத்ரி நாராயணன், I.P.S.அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்,
காவல் ஆய்வாளர்கள்,
காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள்
மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன் IPS அவர்கள்
காவல் ஆய்வாளர் 1, உதவி ஆய்வாளர்கள்-5, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்- 2, காவலர்கள்-14 என மொத்தம்-22 நபர்களுக்கு
பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன் அவர்கள் பேசுகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️