கோவையில் நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியாமான ஆணையை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு விஜயகுமார்.I.P.S அவர்கள் வழங்கினார்..
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்ததால் 2022- ம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கோவை மாவட்டத்தை சேர்ந்த *5 நபர்கள்* வெற்றி பெற்று காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 5 நபர்களுக்கும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் *திரு. விஜயகுமார், இ.கா.ப.,* அவர்கள் இன்று (20.02.2023) கோவை சரக காவல் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப.,* அவர்களும் காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்ற 5 நபர்களையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
🌳 கே தமிழகம் சேட் ✍️