திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து
ஒற்றை யானை கடந்த 2 மாதங்களாக அப்பகுதியில் சுற்றித்திரிந்து பனை மரங்களை வேரோடு பிடுங்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வந்தன.
இதுகுறித்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர். மேகமலை. புலிகள் காப்பகம் மதுரை வன பாதுகாவலர் மற்றும் திருநெல்வேலி களக்காடு முண்டாந்துறை பொறுப்பு கள இயக்குனர் பத்மாவதி அறிவுறுத்தலின் பேரில்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர். மற்றும் துணைஇயக்குனர்
செண்பக பிரியா உத்தரவின் பேரில்
அம்பாசமுத்திரம் வன சரகஅலுவலர் நித்தியா மேற்பார்வையில்
வனத்துறையினரும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிங்கம்பட்டி பீட்-2 பொட்டல் சீராங்குளம் பகுதியில் ஒற்றை யானை வந்தது. அந்த யானை அங்குள்ள பனை மரத்தை வேரோடு பிடுங்கி கீழே தள்ளியது. அப்போது, மணிமுத்தாறில் இருந்து பொட்டல் பகுதிக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி மீது பனை மரம் விழுந்தது.
இதில் மின்கம்பி, பனைமரம் அப்படியே சரிந்து கீழே விழுந்தது. அந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக யானை மிதித்தது. இதில் அந்த யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக
அம்பாசமுத்திரம் வனகோட்ட துணை இயக்குனர்
செண்பக பிரியா, அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலர் நித்யா, உதவி போலீஸ் சூப்பிரண்டு பர்வீர்சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், 'மின்சாரம் தாக்கி இறந்த யானை 45 வயதுடைய ஆண் யானையாகும்.
புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் யானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டனர் மேலும் இதுபோன்று வன உயிரினங்கள் இறப்பை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி யானை பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாளவாடி கரும்புத் தோட்டத்தில் இருந்த சிறுத்தையை பாதுகாப்பு கவச உடை அணிந்து வனப்பகுதிக்கு விரட்டி வனத்துறையினர் ...!!
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவதும், தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில்
தாளவாடி மலைப்பகுதி மல்குத்திபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி குருசாமி என்பவரது கரும்புத் தோட்டத்திற்குள் நேற்று மாலை சிறுத்தை நடமாடுவதாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்
ஆசனூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் தேவேந்திரன் குமார் மீனா உத்தரவின் பேரில்
தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ் நிர்மல் தலைமையில்
வனவர்கள். வனக்காப்பாளர்கள் வனகாவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள்.உள்ளிட்ட
குருசாமியின் கரும்பு தோட்டத்துக்குச் சென்றனர்.
அப்போது கரும்புத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்டுவதற்காக வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கவச உடையை அணிந்தபடி துப்பாக்கியுடன் கரும்பு தோட்டத்திற்குள் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டு
அங்கு பதுங்கி இருந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தன உடனடி நடவடிக்கை எடுத்த வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்..!!
🌳 *கே தமிழகம் சேட்* ✍️