கோவை வனக்கோட்டம் பெரியநாயக்கன்பாளையம். காரமடை. அருகே உள்ள கட்டாஞ்சி மலை பகுதியில் பழமையான தண்டி பெருமாள் கோவில் அமைந்துள்ளது
மழை பகுதி என்பதால் இங்கு அடிக்கடி காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும் இதனால் பகல் நேரத்தில் மட்டுமே இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று நள்ளிரவு இந்த கோவில் வளாகத்தில் உள்ள வெளிப்புற கேட்டை உடைத்தபடி உள்ளே புகுந்த நான்கு காட்டு யானைகள் கோவிலில் அன்னதானத்திற்காக வைத்திருந்த உணவு பொருட்களை ருசிபார்த்தது
கோவில் நிர்வாக அறையில் பிரசாரம் தயாரிப்பிற்காக வைத்திருந்த அரிசி, பருப்பு, வெல்லம். உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுத்து போட்டு ருசிபார்த்ததுடன் இருப்பு வைத்துள்ள அறைக்கும் சென்று பொருட்களை கதவுகளை உடைத்து
உணவு பண்டங்களை தேடியுள்ளது.
இதன் பின்னர் கோவிலின் மூலவர் அறையின் முன்புறம் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களை ஒரு கை பார்த்து விட்டு கோவிலில் இருந்து அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன
இதனையடுத்து காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் சேதப்படுத்தப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்..இது குறித்து அலுவலகத்தில் அமர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றும் வனத்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது யானைகள் கோவில் கதவுகளை உடைத்து உணவு பண்டங்களை தேடி உண்டது தெரியவந்தது.
தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன..
!
இதைக் குறித்து வனத்துறையினர் புலம்புவதாவது
வனக்காப்பாளர்கள் வன காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் என. போதிய அளவு இல்லாததால் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் யானைகளை விரட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆகையால் பிரச்சனைக்குரிய இந்தப் பகுதியில் வனப்பணியாளர்களை கூடுதலாக பணியில் அமர்த்த வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்....!!
🌳 கே தமிழகம் சேட் ✍️