வால்பாறை மானாம்பள்ளி வன சரகம் தனியார் தேயிலை தோட்டத்தில்
பிரசவத்தின் போது தாய் மற்றும் குட்டி யானை உயிரிழப்பு வன உயிரின ஆர்வலர்கள் வேதனை..!!
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனக்கோட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரக உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் காடுகள் தேயிலை தோட்டம்தாய்முடி M.D. எஸ்டேட்.. 7 ஆம் நம்பர் தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஒரு பெண் யானை மற்றும் அதன் குட்டியும் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்
ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் துணை இயக்குனர் ஆகியோர்களுக்கு வந்த தகவல்களை அடுத்து இவர்களின் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக அட்ட கட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மைய உதவி இயக்குனர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் செல்வம் மேற்பார்வையில் மற்றும் மானாம்பள்ளி வனசரக அலுவலர் மணிகண்டன். தன்னார்வலர் கணேஷ்ரகுநாதன், ஆனைமலை புலிகள் காப்பக உயிரியலாளர் அன்வர், தாய்முடி மேலாளர் மேரான், உதவி மேலாளர் கல்பாசத்தி மற்றும் வனப் பணியாளர்கள் முன்னிலையில் . ஆனைமலை புலிகள் காப்பகம்
வனகால்நடை உதவி மருத்துவ அலுவலர் வீரராகவன்.
இறந்த பெண் காட்டு யானை மற்றும் குட்டி காட்டு யானையின் உடலை உடற்கூறாய்வு செய்த பின்னர்
அதில் உயிரிழந்த பெண் யானை சுமார் 35 லிருந்து 40 வயது இருக்கலாம் என்றும் அவைகளின் உடல்களிலிருந்து கிட்னி, இதயம், குடல் மற்றும் நுரையீரல் ஆகிய உடற்கூறு மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக சேகரம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரசவத்தின் போது குட்டி யானை இறந்திருக்கலாம் எனவும் இறந்த பெண் யானை பிரசவ வலியால் இதயம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த பெண் யானை மற்றும் இறந்த குட்டி யானையின் உடல்கள் தொழிலாளர்களின் குடியிருப்பின் அருகில் இருப்பதாலும் குடிநீர் ஆதாரம் அருகில் இருப்பதாலும் மருத்துவரின் ஆலோசனைப் படி சம்பவப் பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் குறித்து மானாம்பள்ளி வன சரகத்தினர் சரியான ரோந்து பணி சென்று யானை பிரசவிக்கு முன்பே யானையை கண்டறிந்து பாதுகாப்பு வழங்கியும் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் யானையை உயிரிழக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும்.
என வன உயிரின ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்...!
மேலும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...!!
🥦 கே தமிழகம் சேட் ✍️