திறன் மேம்பாட்டு பயிற்சியில் . பங்கேற்ற.பெண் காவல் ஆளிநர்களுக்கு. T.செந்தில்குமார்.I.G. அறிவுரைகள். கூறி.சான்றிதழ்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 08.03.2025 முதல் 20.09.25 வரை கோவை பணியிடை பயிற்சி மையத்தில் இரண்டு கட்டங்களாக (Phase-I & Phase-II) நடைபெற்றன.
இப்பயிற்சி வகுப்பில், கோயமுத்தூர் சரகம், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் பெண் காவலர்கள் முதல் பெண் சிறப்பு எஸ்ஐக்கள் நிலை வரையிலான 1946. ஆளிநர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
இப்பயிற்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அவர்களை கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை ஆவணப்படுத்துதல், போக்சோ மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தெளிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு மற்றும் அரசு உதவி குறித்த வகுப்புகள் இடம்பெற்றன. மேலும் உடல் மற்றும் LD 60T உறுதியை மேம்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.
20.09.2025 நடைபெற்ற இப்பயிற்சி நிறைவு விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் . T. T.செந்தில்குமார், I.P.S., அவர்கள் கலந்துகொண்டு அறிவுரைகள் வழங்கியதோடு இப்பயிற்சியில் பங்கேற்ற பெண் காவல் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு
மேற்கு மண்டல காவல்துறை தலைவர்.T செந்தில்குமார். I.P.S.
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசி மோகன்
IPS. ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,I.P.S..அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (21.09.2025) காருண்யா நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
சிறுவாணி சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ஐயப்பன் (29) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (32)மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த லிங்கம் மகன் ரமேஷ் (44) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட
*சுமார் 350 கிலோ* புகையிலை பொருட்கள், *இருசக்கர வாகனம்-1* மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்த பயன்படுத்திய *நான்கு சக்கர வாகனம்-1* ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
🌳 கே தமிழகம் சேட் ✍️