டாப்ஸ்லிப் கோழிகமுத்தி.மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக வனத்துறை சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையைவனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதிசுப்ரியா சாகு IAS. துவக்கி வைத்தார் மலைவாழ்


பொள்ளாச்சி
 வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு IAS அவர்கள் 

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமுக்கு வருகை தந்து  அங்குள்ள வளர்ப்பு யானைகள் பராமரிப்பது குறித்து கேட்டிருந்த சுப்ரியா சாகு அப்பகுதியில் குடியிருந்து வரும் பழங்குடியின மலைவாழ் மக்களுடன் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர்  பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் இடங்களை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்..



மேலும் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி மற்றும் கூமட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக வனத்துறை சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கி வைத்தார்..


இதைத்தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள அக்காமலை பகுதியில் உள்ள புல்மலை பகுதிக்கு சென்ற கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு  

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடுகள் வாழ்விடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்..

இதனைத் தொடர்ந்து 
வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த வனசரகர் மணிகண்டன் உள்ளிட்ட வனபணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்க பரிசாக 5000 ரூபாயும் வழங்கினார்..


இதனைத் தொடர்ந்து மானாம்பள்ளி மந்திரிமட்டம் பகுதியில் கூண்டில் வைத்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் புலியை நேரில் பார்த்து அதன் பராமரிப்பு குறித்தும் இந்த புலியினை வனப்பகுதிக்குள் செல்ல ஆய்வுகளையும்  வனத்துறை அதிகாரியிடம் கேட்டிருந்தார், 

இந்த ஆய்வின்போது  ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம்

ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனக்கோட்டம்
 துணை இயக்குனர் பார்க்கவே தேஜா.

உல்லந்தி  டாப்ஸ்லிப் வனசரக அலுவலர் சுந்தரவடிவேல். 

வால்பாறை வன சரக அலுவலர் வெங்கடேஷ். மானாம் பள்ளி வனசரக அலுவலர் மணிகண்டன்.
பொள்ளாச்சி வளசர அலுவலர் புகழேந்தி.
 உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்..

🌳 கே தமிழகம் சேட் ✍️