முதுமலையில் யானை பொங்கல் விழா வளர்ப்பு யானைகளுக்கு
பசுந்தீவனம் வழங்கும் திட்டத்தை
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி.வெங்கடேஷ் I.F.S. தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைபுலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முதுமலை தெப்பக்காடு வனசரகம் யானைகள் முகாமில் வனத்துறையினரால்
27 யானைகள் கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது..
வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பனிகளுக்கு உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு
நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்
இந்தாண்டு தெப்பக்காடு முதுமலையில் யானைகள் முகாமில் கொண்டாடபட்ட
யானை பொங்கல் விழாவில் யானைகளை குளிப்பாட்டப்பட்டு , அலங்கரித்து வரிசையாக நிறுத்தப்பட்டன
பின்னர்
பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு
பின்பு மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி. இசைக்கருவிகளை இசைத்தவாறு மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டபின்னர் யானைகளுக்கு
பிடித்த உணவான கரும்பு, வாழை, தர்பூசணி. ஆப்பிள். கொய்யாப்பழம். அண்ணாச்சி பழம்.மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கினார்கள்.
அப்போது யானைகள் துத்திக்கையை தூக்கிய வாறு பிளிறியபடி வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தது
முன்னதாக
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
நீலகிரி மாவட்ட ஆட்சியர்
திருமதி அருணா.
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ்
முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் வித்யா. நரேந்திர பாபு.
உதகை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம்
முதுமலை புலிகள் காப்பக மசினகுடி வன கோட்ட துணை இயக்குனர் அருண்குமார்
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல்.
வனசரக அலுவலர்கள் சார்பில் தெப்பக்காடு வனசரக அலுவலர் மனோஜ்குமார்.
மசனகுடி வன சரக அலுவலர் பாலாஜி
யானைகள் முகாம் வனசரக அலுவலர் மேகலா ஆகியோர் . மற்றும் யானை பாகன் கள் மவுத் குடும்பத்தினர் தனித்தனியாக பொங்கல் வைத்தனர்
பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன
பின்னர் உறியடித்தனர்
தொடர்ந்து பாரம்பரிய இசை கருவிகளை விசைத்தவாறு ஆதிவாசி மக்கள் நடனம் ஆடினார் இதைக் கண்ட அதிகாரிகள் குடும்பத்தினர் சுற்றுலா பயணிகள் அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்
இந்த நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது
முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு
பசுந்தீவனம் வழங்கும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் வனங்களில் உள்ள மரங்கள் பாதுகாக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி.வெங்கடேஷ் தெரிவித்தார்
யானை பாகன்கள் மரங்களில் உள்ள இலை, தலைகளை வெட்ட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்
இந்த யானை பொங்கல் விழாவில். கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கிப்பட்டது
யானை பொங்கல் விழாவினை தொடர்ந்து யானைகள் முகாம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய யானை காவடிகள், சீருடை பணியாளர்கள் மற்றும் கால்நடை பணியாளர்களுக்கு
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், வெங்கடேஷ்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி அருணா.
நீலகிரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல். அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில்
கூடலூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கொம்மு ஒம் கார்.
முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார்.
மறுகுடி அமர்வு வனசரக அலுவலர் சதாம் உசேன்.
சீகூர்அலுவலர் தயானந்தன்
கார் குடி வனசரக அலுவலர் விஜயன்.
முதுமலை வனசரக அலுவலர் பரதன்..
சிங்கார வனசரக அலுவலர் ஜான் பீட்டர்.
வனசரக அலுவலர் சஞ்சீவி.
வனவர்கள். வனக்காப்பாளர்கள். வனகாவலர்கள்.
வளர்ப்பு யானை காப்பாளர்கள் காவடிகள்.மவுத்
வேட்டை தடுப்பு காவலர்கள்
மேலும்
கேரளா- கர்நாடகா- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்..
மேலும் சுற்றுலா பயணிகள். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள். கல்லூரி மாணவ. மாணவிகள். கூறுகையில் வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம் ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது
புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் இங்கு ஒரே இடத்தில் 27. யானைகளை பார்பது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
🌳 கே. தமிழகம் சேட் ✍️