சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து பேசினார் 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும். என தகவல்

சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று மாண்புமிகு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து பேசினார்  

இதைத்தொடர்ந்து 

தமிழக தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்  பியூஷ்கோயலுக்கு அவர்களுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
💠 எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன்.

💠 இன்று சென்னையில் பெய்யும் மழை போல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.

💠 முதலமைச்சராக மட்டுமின்றி சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.

💠 தனித்த தொழில்வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

💠 பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

💠 திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி தமிழில் உண்டு.

💠 கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள்

💠 தமிழகத்தில் உண்டு.
  எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தொழில்
கூட்டமைப்பினருக்கு நன்றி.

💠 எனது அழைப்பை ஏற்று வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி. வங்கிப் பணியாளராக இருந்து நிதி, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர் பியூஸ் கோயல்.

💠 அமெரிக்க உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.

💠 தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும்.

💠 இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்.

💠 2030க்குள் 
1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

💠 பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவ வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

💠 2021ல் பொறுப்பேற்ற பிறகு இந்த வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறோம்.
💠 திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதில் தமிழகம் உறுதியாக இருக்கிறது 

💠 பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

💠 பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

💠 கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
💠 ஜவுளி, மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

💠 தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

💠 தமிழகம் முழுவதும் தொழில்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

💠 ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி உள்ளன. இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்க சிறந்த சூழல் உள்ளதற்கு சான்று.

💠 எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்களை தமிழகம் கொண்டுள்ளது.

💠 இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன என்று 
அவர் கூறினார்.

💠 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:-

💠 ரிலையன்ஸ் ஜியோ-ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை)

💠 கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம்) 446 பேருக்கு வேலை.

💠. டாடா எலெக்டரானிக்ஸ்-ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீடு (கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம்) 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


💠 பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.

💠.வே.எஸ். டபிள்யூ-ரூ.12 ஆயிரம் கோடி (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 பேருக்கு வேலை)

💠 டி.வி.எஸ். குழுமம்-ரூ.5 ஆயிரம் கோடி (தமிழகம் முழுவதும் திட்டங்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு)

💠 சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம்-ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது)

💠 வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட்-ரூ.16  ஆயிரம் கோடி (தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைகிறது)

💠. ஹூண்டாய்-ரூ.6 ஆயிரம் கோடி (காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படுகிறது


💠. குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது.


🌳 கே தமிழகம் சேட் ✍️