சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மேற்கு மண்டல தலைவர் திருமதி.பவானீஸ்வரி, I.P.S. அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மேற்கு மண்டல தலைவர் திருமதி.பவானீஸ்வரி, I.P.S. அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

கோவை
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

.பத்ரிநாராயணன், I.P.S.,அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 
அதன் அடிப்படையில்

 காரமடை பகுதியில் சட்ட விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான செந்தூர் நகர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது 
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சத்தியசீலன் மகன் அருண் (29) 
மற்றும் செல்லப்பன் மகன் சந்தோஷ்குமார் (42) ஆகியோர் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்ததை கண்டறிந்து, மேற்படி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 

மதுபான பாட்டில்கள் -1667, நிரப்பப்படாத மதுபான பாட்டில்கள்-1745, எரிசாராயம்-180 லிட்டர் மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி 

அருண்(29)மற்றும் சந்தோஷ் குமார் (42) ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மேற்கு மண்டல தலைவர் திருமதி.பவானீஸ்வரி, I.P.S. அவர்கள்
மேட்டுப்பாளையம்  உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி உள்ளிட்ட காவல்துறையினரை
 பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

மேலும் கோவை சரக துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்கள்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன் அவர்கள் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

🌳 கே தமிழகம் சேட்  ✍️