பவானிசாகர் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 நபர்களை பிடித்து வனத்துறை விசாரணை..!!

பவானிசாகர் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 நபர்களை பிடித்து வனத்துறை விசாரணை..!!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில். தாளவாடி. சீரஹள்ளி. தலமலை. ஆசனூர். கேர்மளம் கடம்பூர். பர்கூர். அந்தியூர்.பவானிசாகர். விளாமுண்டி. 
டி என் பாளையம். சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை. சிறுத்தை. புலி. கரடி. காட்டுமாடு. மான். மற்றும் பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன்.

இதனைத் தொடர்ந்து

சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) 
 கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார். அறிவுறுத்தல் பேரில்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக , ஆசனூர் வனகோட்ட துணை இயக்குனர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) சுதாகர்  உத்தரவின்படி

அந்தந்த வன சரக அலுவலர்கள் மேற்பார்வையில். வனப்பகுதியில் மற்றும் வன  சாலைகளில்
.இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டு வாகன தணிக்கை செய்தும்
வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும்  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறனர் 

இதனைத் தொடர்ந்து


பவானிசாகர் வனசரக அலுவலர்.    செ.சிவக்குமார்  மேற்பார்வையில்

கொத்தமங்கலம் பிரிவு வனவர் தலைமையில் கொத்தமங்கலம் காவல் சுற்று வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலாகள் கொண்ட சிறப்பு ரோந்து குழு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் பிரிவு, கொத்தமங்கலம் காவல் சுற்றுக்கு உட்பட்ட போலிபள்ளம் சராகத்தில், போலிபள்ளத்திற்கு நீர் அருந்த வரும் புள்ளிமான்களை நைலான் வலைகளை கட்டி புள்ளிமானை வேட்டையாடிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் ஊர் பெயர் விசாரணை செய்ததில் புது பீர்கடவு சேர்ந்த எ1. சின்னச்சாமி . எ2.சதீஷ்குமார் திருமுருகன்பூண்டி 
எ3. வெங்கடேஷ் 
 மற்றும் பீர்கடவு எ4.கார்த்திகேயன் த/பெ சின்னதுரை 
 என்பது தெரியவந்தது. பிடிப்பட்ட எதிரிகளை பவானிசாகர் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து இச்சரக வன உயிரின குற்ற அறிக்கை
எண்.05/2023 வழக்கு பதிவு செய்து எதிரிகளையும், பிடி பொருட்களையும் 

சத்தியமங்கலம் கனம்
குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டது.

என வனத்துறை சுற்று அறிக்கையில் தெரிவித்துள்ளன 

🌳 கே தமிழகம் சேட் ✍️