சத்தியமங்கலம் வளர்ப்பு நாய்களை வைத்து மான் வேட்டை ஆடியவர் கைது...! மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. வனத்துறை தகவல்...!


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில். தாளவாடி. சீரஹள்ளி. தலமலை. ஆசனூர். கேர்மளம் கடம்பூர். பர்கூர். அந்தியூர்.பவானிசாகர். விளாமுண்டி. 
டி என் பாளையம். சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை. சிறுத்தை. புலி. கரடி. காட்டுமாடு. மான். மற்றும் பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன்.

இதனைத் தொடர்ந்து

சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) 
 கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார். அறிவுறுத்தல் பேரில்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் ஈரோடு மாவட்ட வன அலுவலர் 
வெங்கடேஷ் பிரபு உத்தரவின்படி

அந்தந்த வன சரக அலுவலர்கள் மேற்பார்வையில். வனப்பகுதியில் மற்றும் வன  சாலைகளில்
.இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டு வாகன தணிக்கை செய்தும்
வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும்  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறனர் 

இதனைத் தொடர்ந்து



சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு)  கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார். அறிவுறுத்தல் பேரில்

இதனை அடுத்து

பவானிசாகர் வனசரக அலுவலர். மற்றும் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பொறுப்பு  செ.சிவக்குமார்  மேற்பார்வையில்

வனவர்கள்.ஆ.ஈஸ்வரமூர்த்தி, பண்ணாரி பிரிவு வடவள்ளி காவல் சுற்று வனக்காப்பாளர் .கா.ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழு வடவள்ளி பீட்டிற்குட்பட்ட குத்தியாலத்தூர் காப்புக்காடு, செம்மண் குட்டை சராக பகுதிகளில் வேட்டைத்தடுப்பு ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த போது  சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் புதர் மறைவில் ஏதோ செய்து கொண்டிருப்பதை அறிந்து, 

அவர்களை சுற்றி வளைத்து பிடிக்கையில் ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டார். பிடிபட்ட எதிரியிடம் விசாரிக்கையில் 

சத்தியமங்கலம் வட்டம், சிக்கரசம்பாளையம் கிராமம், இராமபைலூர் தொட்டியை சேர்ந்தவர்  கோபால் என்பது தெரிய வந்தது. 
பிடிபட்ட எதிரியிடம் தப்பியோடிய எதிரி யார் என்பது குறித்து விசாரணை செய்கையில் 

சத்தியமங்கலம் வட்டம், சிக்கரசம்பாளையம் கிராமம், அட்டமொக்கை கிராமத்தை  ஜான்பீட்டர் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் வனப்பகுதியில் உள்ள குட்டையில் நீர் அருந்த வரும் புள்ளி பான்களை 

இவர்களது வளர்ப்பு நாய்களை வைத்து வேட்டையாடி, 

இறந்த புள்ளி மானின் உடற்பாகங்களை வனப்பகுதியில் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டிருக்குபோது வனத்துறை அதிகாரிகளால் குற்றம் கண்டு பிடிக்கப்பட்டு, குற்ற வழக்கு பதிவு செய்து,  

சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஈரோடு  கள இயக்குனர் மற்றும் மன பாதுகாவலர் ராஜ்குமார். அறிவுறுத்தல் பேரில்

ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின்படி.

வனச்சரக அலுவலர் சிவக்குமார்  விசாரணை மேற்கொண்டு 

இன்று 31.10.2023 ஆம் தேதி பிடிபட்ட எதிரிக்கு 15 நாட்கள் சத்தியமங்கலம் நீதிமன்ற அடைப்புக்காவலில் வைக்கப்பட்டது. தப்பியோடி தலைமறைவான எதிரியை தேடும் பணியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என வனத்துறையினர் தகவல்...!.

🌳 கே தமிழகம் சேட் ✍️