பவானிசாகர் வன சரகத்தில் ஆண் புலி உயிர் இறந்தது வனத்துறை தகவல்..!
பவானிசாகர் வன சரகர் அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது கொத்தமங்கலம் பிரிவு, கொத்தமங்கலம் காவல் சுற்று, வனப்பகுதியில் சும்மா ஐந்து வயது உடைய ஆண்புலி ஒன்று இறந்ததுகிடந்தது
கண்டறியப்பட்டது போது
இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர். ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் பொறுப்பு. மற்றும் ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில்.
பவானிசாகர் வனச்சரக அலுவலர், சத்தியமங்கலம் வனப்பாதுகாப்பு படை, வனவர், கொத்தமங்கலம், உலகளாவிய நிதியகம் (WWF) திட்ட அலுவலர், காராச்சிகொரை கிராம வனக்குழு தலைவர், ஜங்கில் (Jungle-NGO) அரசு சாரா தொன்டு நிறுவன தலைவர் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனகால்நடை உதவிமருத்துவர், சதாசிவம் . மற்றும் கால்நடை மருத்துவர் கள். ராஜா நகர் வடிவேல். சிக்கரசம்பாளையம்.திருவேங்கடம்.
அவர்களால் இறந்த புலியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் முடிவில் சுமார் ஐந்து வயதுடைய ஆண் புலி இறந்தற்கான காரணம் தெரியவரும். என வனத்துறையினர் தகவல்--!
மசனகுடி வனக்கோட்டம் சிங்காரா வன சரகத்தில் சுமார் 6 வயதுடைய பெண் சிறுத்தை உயிரிழந்தது வனத்துறை தகவல்..
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி-உதகை சாலையில் வாழைத்தோட்டம் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்திருப்பது வனகளப்பணியாளர்களின் களத்தணிக்கையின் போது 25.07.2023 அன்று மாலை கண்டு பிடிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் உத்தரவின்படி
தேசிய புலிகள் முகமையின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி. முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார்
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் இறந்த சிறுத்தையின் பாலினம் பெண் என்பதும் அதற்கு வயது சுமார் ஆறு என்பதும் கண்டறியப்பட்டது. சிறுத்தையானது மற்றொரு ஊன் உண்ணியால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என வனத்துறையினர் தகவல்
கே.. தமிழகம் சேட்